பக்கம்:இன்னொரு உரிமை.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6  சு. சமுத்திரம்

உடனே ஒங்க கைய கதவுல வச்சு அடிச்சீங்க... அப்புறம் நைட்ல 'நல்லபடியா' இருக்கப்போ என் கையத் தூக்கி ஒங்க கன்னத்துல அடிச்சீங்க... இடத்த மாத்துனாலும் கதைய மாத்தப்படாது!"

"அது அப்புறம். மயிலாப்பூர்ல இல்ல அடிக்க வந்தது: திருவல்லிக்கேணில. அடிச்சது சிந்தாதிரிப்பேட்டையில."

"ஒங்களுக்கு வயசாயிட்டுதா... நெனவு குழம்பிட்டு... என் ராசா, என்னை அடிச்சிருக்கார்... பிடிச்சிருக்கார்... கடிச்சிருக்கார். ஆனால் எல்லாமே தாபத்துலதான்கோபத்துல இல்லை."

"சரி போவட்டும். ஒருதடவ சினிமாவுக்குப் புறப்பட்டோம். நீ டிரஸ் பண்ண டயம் எடுத்தே, நான் கரடியா கத்தியும் பிரயோசனம் இல்ல. உடனே நான் சினிமாவும் வேண்டாம். கினிமாவும் வேண்டாம்னு ஆபீஸைப் பார்த்து போயிட்ட காலத்துல பெத்த பிள்ளிங்கதானே பேரண்சுக்கு வசதிகள்... எப்படியோ பம்பாய் வசதியாய் இருக்குன்னு போயிட்டான். எனக்கும் பாக்கிக்கும் மனது கேட்க மாட்டக்கு... பம்பாய்க்கு அவனோட செட்டிலாயிட்லா முன்னால், அவன் கூப்புடல. ஒகே... ஏய் பாக்கியம் இன்னுமா கிட்சன் வேல முடியல?"

"பாக்கியம்மா! காபி கிடக்கட்டும், மொதல்ல வாங்க!"

பாக்கியப் பாட்டி வெளிப்படவில்லை. ராமநாதன் தாத்தா பாஸ்கரத் தோழனின் தோளில் கையூன்றியபடியே எழுந்து நடந்தார். சமையலறையில் பாட்டி இல்லை. பக்கத்து அறையை பரபரப்பாக எட்டிப் பார்த்தார். உள்ளே ஒரு கட்டிலில் பாட்டி குப்புறக் கிடந்தாள். மோவாய் கட்டில் சட்டத்தில் இடிக்க, தலையில் முக்காடு போட்ட படி கிடந்தாள். தாத்தா பயந்துபோனார்.

"ஏய்! என்னம்மா ஆச்சு..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/15&oldid=1369491" இலிருந்து மீள்விக்கப்பட்டது