பக்கம்:இன்னொரு உரிமை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144  சு. சமுத்திரம்


மனைவியின் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்த இசக்கியா பிள்ளை மீண்டும் நெடிய மௌனம் நிலவியதைக் கண்டார். தெய்வ வழிபாடு, இப்படிப்பட்ட லோகாயத விவகாரங்களால் தடைப்பட்டதற்கு வருந்தி, தம்பணம் போட்டுக் கொண்டார். அபிராமி அந்தாதியை எடுத்தார். கம்பெனி சகாக்களுடன் "தெய்வப் பயணம்" மேற்கொண்ட போது வாங்கிய புத்தகம். திருக்கடவூர் அபிராமிதேவியை அபிராமி பட்டர் பாடியதைப் பாடும்போதெல்லாம் இவரது குரல் தழுதழுக்கும். எலும்புருகிப் போகும். உடல் முழுதும் ஜோதியாவது போல் தோன்றும். அந்த அபிராமி பட்டருக்கு வராத துன்பமா? அவர் பட்ட பாட்டில்... என் பாடு சிறுபாடு...

"பரிபுரச் சீரடி பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரச் சுந்தரி ; சிந்துர மேனியள்; தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக்குனி பொருப்பு சிலைக்கை

எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே"

தடுத்தது இசக்கியா பிள்ளையின் பக்திப் பரவசத்தை. மீண்டும் தாய்-மகள் யுத்தம்.

"போராடும் முன்னாலேயே தோல்வியை ஒப்புக்கொண்டால் என்னம்மா அர்த்தம்? இன்ஸ்பெக்டர்கிட்டே சொல்லுவோம். அவர் கேட்காட்டா அஸிஸ்டெண்ட் கமிஷனர்! அவரும் சரிப்படாட்டா டெப்டி கமிஷனர்! அப்புறம் கமிஷனர்! டைரக்டர் ஜெனரல்! இவங்களாலயும் முடியாவிட்டால் முதலமைச்சர். இல்லாத பொண்ணுங்களை என்னவேணுமுன்னாலும் செய்யலாமுன்னு நினைக்கிறாங்க பாருங்க! இந்தமாதிரிப் பயல்களை விடப்படாதும்மா!"

"அம்மாவுக்கு ஒன்னைவிட யாரும்மா முக்கியம்? அப்படியே போலீஸ் மூலமாய் கோர்ட்டுக்குப் போய், நீ வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி, தோல்வியைவிட மோசம்மா... ஆமாம்மா. ஒரு பெண்ணோட பேரு நல்லவிதமாக்கூட அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/153&oldid=1369280" இலிருந்து மீள்விக்கப்பட்டது