பக்கம்:இன்னொரு உரிமை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146  சு. சமுத்திரம்


னோட சம்மதத்தில் மட்டுமில்ல. ஒருத்தியோட சம்மதத்துலயும் இருக்குது என்கிறதை மறந்துடாதீங்க! அத ஏதோ... ஒருத்திக்கு ஒருத்தன் கொடுக்கிற சலுகை இல்லே. நல்லவனோட கல்யாணம் நடக்கணும் என்கிறதுக்காக அயோக்கியனுக்கு அஞ்சி, ஒடுங்கி இருக்கப்படாது. அந்தப் பிரின்ஸிபால் பயலுக்குக் கொடுக்கிற பாடத்தைப் பார்த்துட்டு, அவனை மாதிரியான பயல்களெல்லாம் பெட்டிப் பாம்பாய் ஆகணும்!"

"நான் எதுக்குச் சொல்லுதேன்னால்..."

"சத்தியத்தைத் தேடுறது தான் மெய்யான பக்தின்னு டியூஷனுக்கு வார பிள்ளைங்ககிட்டே காசு வாங்கிட்டுக் கத்த மட்டுந்தான் ஓங்களுக்குத் தெரியுமா? ஒருத்தன் ஒரு பெண்ணோட வரம்பை மீறும்போது, அந்தப் பெண் தன்னோட வரம்பை அடக்கிக்கிட்டு இருக்கறது தான் தமிழ்க் கற்பா! குப்பையில் போடுங்க கொண்டு."

"நீ இப்போதான் இளமையின்..."

"நாலு நாளைக்குள்ளே நான் கிழவியாய் ஆயிட்டேம்மா. சரி. எப்படியோ தொலையுங்க! காலமெல்லாம் நான் கூனிக்குறுகியே கிடக்குறேன். அவன் தொட்ட இந்தக் கைகூட ஏதோ விபத்துல விழுந்துட்டாலும் அவன் தந்த விபத்த என்னால் மறக்க முடியுமா? வலியவனைக் கண்டு அவனோட வம்பையும் பொறுத்துக்கிட்டு மெலியவர் இருக்கிறது தான் நியாயமுன்னு அநியாயமாய்ப் பேசுறீங்க.... ஓர் அநியாயத்தை வெளில பேசுறது கூடத் தப்புன்னால் அது அந்த அநியாயத்துக்கு உடன்போவதாய் ஆகாதா? அதோ அப்பா 'நாமார்க்கும் குடியல்லோ'முன்னு ரொம்பத்தான் கத்துறார். அவருக்கு அதோட அர்த்தம் தெரியாது. தமிழா சிரியையான ஒங்களுக்காவது தெரியுமா! நாமார்க்கும் குடியல்லோ முன்னு... ஓதி... அப்பர் பாடுவதைக் கொச்சப்படுத்தாண்டாமுன்னு அப்பாகிட்டே போய்ச் சொல்லு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/155&oldid=1369287" இலிருந்து மீள்விக்கப்பட்டது