பக்கம்:இன்னொரு உரிமை.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுமைதாங்கிகள்

ந்தக் கூட்டத்தைப் பார்த்த உடனேயே, சுலோச்சனா தன்னையறியாமலேயே பெருமிதப்பட்டாள். அவளே அந்தக் கட்டடமாக உயிர்ப்புடன் உருமாறியது போன்ற ஒரு உணர்வு. அந்தக் கட்டடம் தன்னையே பார்த்து, "என்னைக் கட்டி முடித்தவள் கீதா; அதற்குக் காரணமானவள் நீதான்" என்று சொல்வதுபோல் அவளுள்ளே ஒரு குரல் கேட்டது. 'இது என்ன... எனக்கு பயித்தியமா...' என்று உள்ளத்தில் ஒலித்த வார்த்தைகள் உதட்டோரம் சிரிப்பாக உருவெடுக்க, அவள் நின்ற இடத்திலேயே நிலை இழக்காமல் நின்றாள். இவ்வளவுக்கும் அது சின்னக் கட்டடம்தான். ஆனாலும், அவள் மைத்துணி மாதிரியே அழகான கட்டடம். இந்த மழைக்காலம் நின்றதும் மாடி கட்டி, அதில் பிரசவ சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்தப்போவதாக கீதா அவரிடம் சொன்னது நினைவிற்கு வந்தது.

சுலோச்சனா, அந்தக் கட்டடத்தில் காக்கா பொன் நிறத்திலான நான்குப் படிக்கட்டுகளை இரண்டு இரண்டாகத் தாவி, கடப்பா கற்களால் மஞ்சள் பிரகாசத்தில் மின்னிய வராண்டாவில் நடந்து கீதாவின் அறைக்கதவைத் திறக்கப் போனாள். உள்ளே சத்தம் கேட்டது. போதாக்குறைக்கு 'டாக்டர் ஈஸ் இன், பிளீஸ் பீ சீட்டட்' என்ற வாசக பலகை கண்ணில் முட்டியது. அதோடு, அவள் வரிசையை கலைப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/158&oldid=1369294" இலிருந்து மீள்விக்கப்பட்டது