பக்கம்:இன்னொரு உரிமை.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்மைக்கு முதுமை இல்லை  7

"ஒரே தலைவலி. எழுந்திருக்க முடியல!"

"யார் வந்திருக்கா தெரியுமா!"

"தெரியும். ஆனால் யாருக்காகவும் என்னால் எழுந்திருக்க முடியாது."

"சரி அவன கூட்டிட்டு வாறேன்"

"ஒங்களத்தான்... நில்லுங்க! யாரையும் நான் பார்க்கிறாப்போல இல்ல. ஒருத்ர கூட்டிட்டு வந்து அவமானப் படுத்தாதீங்க!"

ராமநாதன் தாத்தா தட்டுத்தடுமாறி பாஸ்கரத் தாத்தாவிடம் வந்து உளறுகிறார்.

"பாஸ்கரா... அவளுக்கு உடம்பு சரியில்லயாம்! அய்யய்யோ நான் போய் பார்க்கணும்."

"வேண்டாம். அந்த இடியட்... நீ இப்போ பாக்காண்டாம். ஒன் அட்ரஸைக் கொடு. நானே வாறேன்."

பாஸ்கரத் தாத்தா எழுந்தார், அவருக்கு எதுவுமே புரியவில்லையானாலும் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றங்களாய் பெற்ற அனுபவத்தில் ராமநாத சிநேகிதனை முதுகில் தட்டிக்கொடுத்தபடியே வெளியேறினார். அவர் கேட்டைத் தாண்டுவது வரைக்குக்கூட பொறுமை இல்லாத வீட்டுத் தாத்தா பாட்டியிடம் வேகவேகமாய் வந்தார், அவள் இன்னும் குப்புறக் கிடந்தாள்.

"ஏண்டி, கூஸ்... ஆயிரந்தான் உடம்புக்கு வரட்டும். வீடு தேடி வந்த ஒரு வயசான மனுஷன், அதுவும் என் பிராண சிநேகிதனை ஒரு வார்த்த உபசரிக்க முடியாமலா போயிட்டு..."

"சொன்னது மறந்துட்டோ ..."

"அவன் என்ன சொன்னான். நான் என்ன சொன்னேன்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/16&oldid=1369495" இலிருந்து மீள்விக்கப்பட்டது