பக்கம்:இன்னொரு உரிமை.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152சு. சமுத்திரம்


“உன் மருமகள் மல்லிகாவிற்கு நல்ல வரன் வந்திருக்கும்மா. மாப்பிள்ளை பெங்களூரில சொந்தமா கம்பெனி நடத்துறார். அவங்க அப்பா எனக்கு தூரத்து சொந்தம். அவங்களே வந்து நகை நட்டு வரதட்சணை எதுவும் தேவை. யில்லன்னு கேக்கறாங்க!”

“அப்படியா... அப்போ மாப்பிள்ளைக்கு ஏதாவது கோளாறு இருக்கப்போறது?”

“நல்லா விசாரிச்சிட்டோம். எதுவும் கிடையாது. ஆனாலும்... நீ வந்து அப்ரூவல் கொடுத்த பிறகுதான் ஆக்‌ஷன், இன்னிக்கி 12 மணிக்கு வறாங்க.”

“எனக்கு எங்கே நேரம் இருக்குது? அம்மாவோட திதிக்கே வரமுடியல! ரொம்ப பிஸி... நீங்க பார்த்தா சரி தான்.”

சுலோச்சனா கீதாவை உற்றுப்பார்த்தாள். பச்சை சேலையில், சிவப்பு சிவப்பாய் மின்னிய அவளைப் பெருமையோடும், சிறுமையோடும் பார்த்தாள். பிறகு “எதுக்கும் டிரை பண்ணு!” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள். உள்ளே கீதா மீண்டும் பேசினாள்: “இவங்க எங்க அண்ணி. நான் எம்.பி.பீ.எஸ். படிக்கக்கூடாதுன்னு அண்ணா குதிச்ச போது இவங்கதான் என்னை விடாப்பிடியா படிக்க வைச் சாங்க” என்றல்ல; “இன்டர்நேசனல் கான்பிரன்ஸை பேஸ் பண்றதுக்கு நர்வஸா இருக்கு டாக்டர். என் பேப்பர் டிஸ்கஷனுக்கு வரும்போது யாரெல்லாம் என்ன சொல்லப்போறாங்களோ!”

பஸ் நிலையத்தை நோக்கி நடந்த சலோச்சனா கண் முன்னால் ஒரு பல்லவன் பஸ் ராகுகாலம் மாதிரி வந்து நின்றது. ‘அய்யய்யோ... இந்நேரம் பிள்ளை வீட்டார் வந்திருப்பாங்களே’ -சுலோச்சனா எதிரே வந்த ஆட்டோவில் ஏறியபடியே, “திருவல்லிக்கேணி” என்றாள். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/161&oldid=1368535" இலிருந்து மீள்விக்கப்பட்டது