பக்கம்:இன்னொரு உரிமை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுமைதாங்கிகள்153

ஆட்டோ துடித்ததுபோல், அவள் மனம் துடித்தது. அது உறுமிக்கொண்டே ஓடியதுபோல் அவள் மனம் பொருமியது.

‘கொஞ்சநாளா கீதா ஒருமாதிரிதான் இருக்காள். ஆனால், உட்காருன்னு சொல்லாத அளவிற்கு இப்போதான் மாறிப்போனாள். அம்மாவின் திதியாம், அம்மாவின் திதி! இருபத்தியெட்டு வருடங்களுக்கு முன்பு நான் அவரோட கையைப் பிடித்தபோதே ஒரு காலுல பக்கவாதம் பட்டு முடங்கிக் கிடந்தவர் மாமியார். அம்மாவைக் கவனித்தால் படிப்புக் கெட்டுவிடும் என்று ஒப்புக்கு சும்மா பார்த்தவள் கீதா, தப்பு... தப்பு... நானும் அவள் படிப்பு கெடக்கூடாது என்பதில் குறியாய் இருந்தேன். இவளோட அம்மா-என் னோட மாமியார் போன வருஷம் உயிருக்குப் போராடினப்போ இவளோட நர்சிங்ஹோமில் சேர்க்காமல், பிள்ளைத்தாச்சியான இவளுக்கு சிரமம் கொடுக்கப்படாதுன்னு ஆஸ்பத்திரில சேர்த்து ராவும், பகலுமா நடந்தவள் நான், அவளோட முக்கல் முனங்கல்களையும் கோபதாபங்களையும் சுமந்தவள். மாமனாரோட எஜமானத்தனத்தை தாக்குபிடிச்சவள். இவளையும் இவள் தம்பி சுரேஷையும் காலையில் எழுப்பி விடுவதிலிருந்து இரவில் படுக்க வைப்பது வரைக்கும் எல்லாமே செய்தவள். அவரோட வாதாடி இரண்டுபேரையும் படிக்க வைத்தவள். அவர் கொடுக்கிற 600 ரூபாய்ல வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி படாதபாடுபட்டவள். அதுவும் வயிற்றை எப்படிக் கட்டினேன்? சொந்தக் குழந்தை, அந்த குழந்தைகளுக்கு குறுக்கே நிற்கக் கூடாது என்பதற்காக வயித்திலே கரு வளராமல் கட்டிப் போட்டவள். ஏழாண்டு திட்டத்திற்குப்பிறகுதான் மல்லிகா உற்பத்தியானாள்! இதனால்தான் பேத்திக்குக் கல்யாணம் செய்து பார்க்கவேண்டிய இந்த வயதில், மகளுக்கு மாப் பிள்ளை பார்க்கிறேன்!’

ஆட்டோ ராயப்பேட்டை வந்து பாரதி சாலைக்குள் நுழைந்து டிரைவர், “வீடு எந்தப் பக்கம்மா?” என்று. கேட்டபோதுதான் சுலோச்சனா சுயமானாள். தன்னையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/162&oldid=1368552" இலிருந்து மீள்விக்கப்பட்டது