பக்கம்:இன்னொரு உரிமை.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156சு. சமுத்திரம்


சுலோச்சனாவின் பிளஸ்-டூ மகன் சங்கர்- மைசூரில் சித்தப்பா வீட்டில் தங்கி பொறியியல் படிக்கலாம் என்று கனவு கண்ட அந்தச் சின்னஞ்சிறுசு, இப்போது யதார்த்த சூட்டில் பெரிய மனிதன்போல் விளக்கம் அளித்தான்:

“எங்கம்மா அந்தக் காலத்திலேயே கிராஜவேட். ஸ்டேட்ஸ்லேயே மூணாவதா வந்தாங்க. கை நிறைய சம்பளம் வாங்கி வேலை பார்த்தவங்க. தாத்தா, பாட்டிக்காகவும், அதோ போகிற சித்தப்பாவுக்காகவும், தியாகராய நகர் டாக்டர் அத்தைக்காகவும் நோயாளியாய் ஆனவங்க!”

சுலோச்சனாவிற்கு மகனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு. அழவேண்டும்போல் இருந்தது. மகனே... மகனே... உன்னை ஆளாக்கிக் காட்டறேண்டா என்று அரற்ற வேண்டும்போல் இருந்தது. அதற்குள் பிள்ளையின் அப்பா சமயோசிதமாகப் பேசினார்.

“அடடே... நீயே உங்க அம்மாவைப் பெத்தது மாதிரி பேசறியேப்பா...”

“தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க. உங்கள விட்டுட்டு, அவன்கிட்ட பேசி குடும்ப விவகாரத்த கிளப்பி விட்டது தப்புதான்”

“நீ என்னம்மா... உன்னைப்பற்றி இன்னிக்குத்தான் தெரியும் என்கிற மாதிரி பேசறியே! எனக்கு எல்லாம் புரியுது. உங்க குடும்பத்துல சம்பந்தம் வைக்க எனக்குக் கொடுத்து வைக்கணும். எங்க குடும்பம் பெரிய குடும்பம். உங்க பொண்ணு சொத்துக்களையும், எங்களையும் கவனிச்சுக்கிட்டா போதும். பொண்ண கூட்டிட்டு வாம்மா!”

சுலோச்சனா வருங்கால சம்பந்தியை கண்களால் கும்பிட்டபடியே உள்ளே போனாள். போகும்போதே மனம் பின்னுக்குச் சென்றது. இதேமாதிரிதான் 28 ஆண்டுகளுக்கு முன்னால் ‘அவரோட’ அப்பா சொன்னார். மனைவியோட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/165&oldid=1376177" இலிருந்து மீள்விக்கப்பட்டது