பக்கம்:இன்னொரு உரிமை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இன்னொரு உரிமை

டுப்பில் இருந்து கணுக்கால்வரைக்கும் எட்டுமுழப் பட்டுவேட்டி ஒளிர, இடுப்பிற்கு மேலே ‘பாப்ளேன்’ சட்டை மினுங்க, கழுத்தில் ஜரிகை போட்ட ‘மேரியல்’ ஜொலிக்க, உதட்டில் வெற்றிலை போட்ட தடயம் ‘டேஞ்ஜர் லைட்’ மாதிரியும் ― லிப்ஸ்டிக் மாதிரியும் பிரகாசிக்க, மோதிரம் போட்ட வலதுகையில் கருப்புக்குடை துலங்க ― சின்னச்சாமி வீட்டை நோக்கி ‘மேக்கப்’ போடு வந்துகொண்டிருந்தார்.

அப்போது அவர் தங்கை தமயந்தி வாசலில் சாணந் தெளித்துவிட்டு, கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். தாமரைப் பூக்கோலம் அது. அடுக்கடுக்காக ஓர் இதழின் மேல் இன்னோர் இதழாக கோலப்பூ உருவாகிக்கொண்டிருந்தது. புருஷன் வருவதை ஊர்க்கிணற்றிலேயே பார்த்து. விட்ட லட்சுமி, ‘தோண்டி’யை அங்கேயே போட்டுவிட்டு, குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு ஓடோடி வந்தாள். வீட்டை நெருங்க நெருங்க அவள் வேகம் அதிகமாகி வாசலுக்கு வந்தபோது உச்சக்கட்டத்திற்கு வந்தது. புருஷனிடம் பேசும் ஆவலை அடக்க முடியாமல், அவள் இரண்டு. கால் வைக்க வேண்டிய தூரத்தை ஒரே காலில் வைத்த போது, குடம் குலுங்கி அதிலிருந்து நீர் ‘சளக்’கென்று கோலத்தில் விழுந்தது. தமயந்தியின் தாமரைப்பூக் கோலம். கிட்டத்தட்ட அழிந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/184&oldid=1369317" இலிருந்து மீள்விக்கப்பட்டது