பக்கம்:இன்னொரு உரிமை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்னொரு உரிமை 177


"ஒனக்கு ஒப்பனமாதிரி விபரந் தெரியல பிள்ளை... பையனுக்கு முந்நூறு ரூபாய்தான் சம்பளம். ஆனால் கெட்டிக்காரன்... சம்பளத்துல சாப்பிட்டு கிம்பளத்துல வீடு கட்டிட்டான்."

"பரவாயில்லையே! அது சரி, எவ்வளவு கேக்கான்?"

"முப்பது கழஞ்சி (இருபது பவுன்) நகையும்... மூவாயிரம் ரூபாய் ரொக்கமும் கேக்குறான்."

லட்சுமியின் முகம் சறுத்தது. அண்ணன் நல்ல முடிவோடு வந்திருப்பதை யூகித்துக்கொண்டு தமயந்தி அந்தப் பக்கமாக வந்தாள். பூவரசு பூவைப்போன்ற நிறம்! நாட்டுக் கட்டை போன்ற அவள் மேனியில், பருவம் 'சன் மைக்கா’ மாதிரி மின்னியது. லட்சுமி 'நாத்தனாரை'ச் சாடினாள்:

"பெரியவிய பேசையில, உனக்கென்ன அம்மாளு இங்க வேல? போயி... மாட்டுக்குப் புண்ணாக்கு வையி போ! போ!"

தமயந்தி புண்ணாக்கு எடுக்கப்போகும் சாக்கில், வீட்டுக்குள் போய் வாசற்கதவிற்குப் பின்னால் காதைத் தவிர, இதர உடற் பகுதிகளை மறைத்துக்கொண்டாள். லட்சுமி, 'இடைவேளைக்குப் பிறகாவது நல்லா இருக்கும்' என்று நினைத்து தம்மடித்து விட்டு வரும் சினிமா ரசிகன் போல் சின்னச்சாமியை ஆவலோடு நோக்கி ஆதங்கத்தோடு கேட்டாள்:

"நீரு சொல்றதப் பாத்தா எனக்குப் பயமா இருக்கு. வேலயில சேர்ந்து மூணு வருஷத்துல ரெண்டு. வீடு கட்டுறவன், அஞ்சு வருஷத்துல கம்பியையும் எண்ணலா மில்லியா?"

"கெட்டிக்காரன் ! மேலிடத்தையும் க வ னி ச் சு க் கிறானாம். மாட்டிக்கமாட்டான்!"

சி.-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/186&oldid=1369415" இலிருந்து மீள்விக்கப்பட்டது