பக்கம்:இன்னொரு உரிமை.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182 சு. சமுத்திரம்

கல்யாணம் ஆகி இரண்டு மூன்று நாட்கள் ஆகியிருக்கும். மோகனின் தந்தை எவர்சில்வர் குடம் மாதிரி கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். சின்னச்சாமியும் லட்சுமியும், தமயந்தியும் மோகனும் ஜோடியாக உட்கார்ந்திருந்தார்கள்.

எவர்சில்வர்காரர் “சின்னச்சாமி! கல்யாணச் செலவு எவ்வளவு ஆகியிருக்கும்?” என்றார்.

“ரெண்டாயிரம் ரூபாய்க்கு மேல போயிருக்காது.”

“அப்படியா? இந்தாங்க ரெண்டாயிரம் ரூபாய்.”

“என்ன மாமா... நீங்க ஒண்ணும் வேண்டாமுன்னிங்க. இந்தச் செலவாவது என்னுதா இருக்கட்டும். உங்க மனசு யாருக்கு வரும்? பரவாயில்லை, வேண்டாம்...”

“அது தப்பு. பேசாம வாங்கும்... கல்யாணச் செலவு எங்க பொறுப்பு.”

“கை கூசுதுக...”

லட்சுமி ‘இடைச்செறுகல்’ ஆனாள்:

“பெரியவர் தர்றத ஏன் வேண்டாங்கிறீயரு? அவரு கையில வாங்குற புண்ணியத்திலாவது நம்ம வீடு விருத்தி யாவட்டும்.”

சின்னச்சாமி வாங்கிக்கொண்டார். எவர் சில்வர் மாமா புன்னகை செய்துகொண்டார். பிறகு-

“மாப்பிள்ளை ஒரு விஷயம். எப்போ பாகப்பிரிவினை பண்ணலாம்?”

“என்னா பாகம்... என்ன பிரிவினை? மாமா சொல்றது. புரியல...”

புரிய வைக்கிறேன். ஒம்ம தங்கச்சியோட சொத்தை. நீங்க பயிர் செய்றதுல எனக்கு ஆட்சேபணை இல்ல. ஆனால் கொண்டான் குடுத்தானுக்கிடையில ‘இசுக்கு’ இருக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/191&oldid=1369056" இலிருந்து மீள்விக்கப்பட்டது