பக்கம்:இன்னொரு உரிமை.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

லவ் ஆல் 11

பார்த்தார்கள். நாமே விளையாடலாமே என்பதுபோல் ஒரு பயல் சம்பத் கீழே போட்ட பந்தை எடுத்து ‘புட்பால்’ ஆடப் போனான். இதைப் பார்த்த சர்விஸ் இளைஞன் “டேய் ஸ்கவுண்ட்ரல்” என்று அவனைத் துரத்தினான் பையனைப் பிடிக்க முடியவில்லையானாலும், அவனால் பந்தைப் பிடிக்க முடிந்தது. ‘டி. ஏ.’ விவாதத்தை முடித்து விட்டு, அவர்கள் அணி பிரியப் போனபோது ஒருவர் ஒரு விவரத்தை விவகாரமாக்கினார்.

“ராகவன் ஆபீஸ் காரை எப்படியெல்லாம் மிஸ்யூஸ் செய்றார் பாருங்க! பசங்களை ஸ்கூல்ல இருந்து கொண்டு போறதுக்கும் வரதுக்கும் ஆபீஸ் கார்தான். தோ, பாருங்க. மிஸஸ் ராகவன் கார்ல இருந்து முருங்கைக்காயோடு இறங்குறதை. சீ இப்படியா மிஸ்யூஸ் செய்யுறது.”

“ஸாரி! இது மிஸ்யூஸ் இல்ல.”

“அப்படின்னா?”

“அப்யூஸ்.”

“ஒங்களுக்கு லிஃப்ட் கொடுக்கலன்னா மிஸ்யூஸ்ன்னு அர்த்தம். தேன் எடுத்தவன் புறங்கையை நக்கத்தான் செய்வான்னு சொல்றது ஏன் ஸார் புரியவில்லை? ஒங்களுக்கு எப்பவுமே டபுள் ஸ்டாண்டர்ட், டபுள் டச்சு.”

“ஸாரி, ராகவன் ஒன்னோட அத்திம்பேர் என்கிறதை. மறந்துட்டேன்!”

“நீங்ககூடத்தான் சுற்றுலா போறதாய் எல். டி. சி. போட்டு பில் காட்டிப் பணம் வாங்கினீங்களாம். பட், மெட்ராஸ் பெஸண்ட் நகரை விட்டுத் தாண்டவே இல்லையாம்.”

“சைலன்ஸ்: ரிஷிமூலம், நதிமூலம் ஆபீஸ் மூலம் பார்க்கப்படாது. லெட் அஸ் பிளே ஏய் சம்பத்! சர்விஸ். போடுடா!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/20&oldid=1388143" இலிருந்து மீள்விக்கப்பட்டது