பக்கம்:இன்னொரு உரிமை.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192  சு. சமுத்திரம்


மறுநாள் ராமலிங்கம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் போய், ரிலீவிங் ஆர்டரை வாங்கிக்கொண்டார். அவருக்காக வைத்திருந்த பிரிவுபசார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார், யூனியன் கட்டிடத்துக்கு வெளியே வந்தவர் ஒரு விவசாயியின் வேண்டுகோளை ஞாபகப்படுத்திக்கொண்டு டிப்போவில் போய், ஒரு டின் பூச்சி மருந்தை. வாங்கினார்.

இரவுப் பொழுது பகலை விழுங்கிக்கொண்டிருந்தது.

வீட்டின் உள்ளறையில் வைத்திருந்த பூச்சி மருந்து டின்னை உரியவரிடம் சேர்ப்பிப்பதற்காக எடுத்தார்.

திடீரென்று ஒரு யோசனை.

இத்தனை ஆண்டு நேர்மையுடனும், நியாயத்துடனும் வாழ்ந்து என்னத்தைக் கண்டோம்? நியாயம் செத்துவிட்ட காலத்தில் எதற்காக வாழவேண்டும்? கழுதையும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும் இந்த டிபார்ட்மெண்டில் எதற்காக இருக்க வேண்டும்? மனைவியை நல்லவிதமாகப் பராமரிக்க முடியவில்லை . அவள் வயிற்றுக்குள் குடல், அவர் மனம் மாதிரி சரிந்துகொண்டு வருகிறது. கடைசிக் காலத்தில் மகனைப் பார்த்துக் கொண்டே கண் மூடலாம் என்று. ஆஸ்பத்திரியில் தவம் கிடக்கும் தந்தையை வாரத்துக்கு ஒரு முறைகூடப் பார்க்க முடியாது. நம்பி இருப்பவர்களை வாழ வைக்க முடியாத அவர் ஏன் வாழவேண்டும்? அப்படியானால் மனைவி மக்களின் சதி?

திடீரென்று இன்னொரு நினைவு.

இன்று முன்னைவிடப் பெருமளவு வசதியாக வேறொரு மாவட்டத்தில் இருக்கும் அவர் மாமனாரை இவருக்குப் பத்தாண்டுகளுக்குப் பின்னால் சேர்ந்து இப்பொழுது விவசாய விஸ்தரிப்பு அதிகாரியாக வேலை பார்த்தவர் பார்த்தாராம். பார்த்த கையோடு 'ஒங்க மகளும் பேரன் பேத்திகளும் ரொம்பக் கஷ்டப்படுறாங்க... கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/201&oldid=1369072" இலிருந்து மீள்விக்கப்பட்டது