பக்கம்:இன்னொரு உரிமை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செத்தாலாவது வாழலாம் 193

உதவக்கூடாதா” என்று கேட்டாராம். அதற்கு அந்த மாமனார் “அவன் செத்தா போய்விட்டான்... நான் என் மகளுக்கு உதவறதுக்கு?” என்று திருப்பிக் கேட்டாராம்!

ஒருவேளை நான் செத்தால்... இந்தப் பிள்ளைகளும் அவங்களைப் பெற்றவளும் வாழலாமோ... மாமனார் அவர்களைக் கூட்டிக்கொண்டு போய் வாழ வைக்கலாம். அதோட தநதையை வரவேற்கத்தான் ஏன் முந்திக்கக்கூடாது?

ராமலிங்கம் பூச்சி மருந்து டின்னின் வாய்ப் பக்கத்தை ஓர் ஆணியை வைத்து அடித்து ஓர் ஓட்டையை உண்டாக்கினார். ‘கடவுளே என்னை மன்னிச்சுடு. இந்த நாற்பத்திரண்டு வயசில் பிறத்தியார் பொருளை இப்போதுதான் சாப்பிடுறேன்’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டே அந்த டின்னின் மரணப் பொந்தை அவர் வாய்க்கு அருகே கொண்டு போனபோது—

வீட்டுக்கு வெளியே, ஏதோ ஒரு மூலையில் இருந்து வந்த எருமை மாடு ஒன்று, யாரோ பின்னால் ஏறி உட்கார்ந்திருப்பதுபோல் முதுகைச் சிலிர்த்துக்கொண்டது.

சி-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/202&oldid=1369396" இலிருந்து மீள்விக்கப்பட்டது