பக்கம்:இன்னொரு உரிமை.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198  சு. சமுத்திரம்


தூக்கி நிறுத்தினான். லிப்ஸ்டிக் கலப்படமில்லாமல் துடித்த உதடுகளையும் மைவேலி போடாத கண்களையும் உற்று நோக்கினான். அந்த அழகில் ஒரு மயக்கம் ஏற்படுவதற்குப் பதிலாக அவன் சுதாரித்தவன் போல் சொன்னான்.

"இன்றைக்கு முதல் டேக் இருக்கிறத மறந்துட்டியா... சீக்கிரமாய் மேக்கப் போட்டுட்டு வா!"

"நான் ரெடி சார்!"

"டயலாக் மனப்பாடம் ஆயிட்டுதா."

"ரெண்டே ரெண்டு வரி! அதுவும் நாடக வரி... மறக்க முடியுமா?"

"முடியாது தான்... ஆனாலும் சொல்லு பார்க்கலாம்."

" ஒரு போராட்டத்துல தாக்குறது முக்கியமில்ல! தாக்குப் பிடிக்கிறதே முக்கியம்.."

"ஓ ஐ அம் ஸாரி! சொல்ல மறந்துட்டேன். பஸ்ட் டேக்... புரட்சிக் கூட்டமில்ல! உன் கிட்டே காதலன் வருவான், உடனே நீ 'இன்று நல்ல நாள், இனி என்றும் வெற்றி நாள்'னு சொல்லணும்."

"முதல் சிட்சுவேசனும் டயலாக்கும் நல்லா..."

"சொல்றதை செய்! நான் இப்போ டைரக்டர். சந்திரன் செத்துட்டான். ஐ அம் ஸாரி... அவன் இல்ல. எடுத்த எடுப்பிலேயே போராட்டம், தாக்குறதுன்னு வசைச் சொல் வரக்கூடாது."

தமிழ்ச்செல்வி, அவனை ஒரு மாதிரிப் பார்த்தாள். புரட்சி நாடகாசிரியன் வறட்சி சினிமாக்காரனாகிவிட்டாரே என்பது போல் பார்த்தாள், கடந்த மூன்று மாதகால திரைக்கதை-டிஸ்கஷன் போன்ற வெண்டைக்காய் சமாச்சாரங் களால், அவன் மாறிவிட்டதுபோல் ஒரு பார்வை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/207&oldid=1369054" இலிருந்து மீள்விக்கப்பட்டது