பக்கம்:இன்னொரு உரிமை.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாசப் பிரிவினை 211

“அப்பிடின்னா சின்ன மகனோடு மதுரைக்குப் போற துன்னு தீர்மானம் பண்ணிட்டிங்களா? போங்க! நல்லா போங்க. நாற்பத்தஞ்சு கால தாம்பத்யத்த உதறிட்டு... சும்மா போங்க! அந்தக் காலத்திலேயே நாம கல்யாண வருஷத்தை கொண்டாடுனதை மறந்துட்டுப் போங்க. நான் ஒன்றும் அழுகிடமாட்டேன்! வேணுமுன்னால், இப்பவே அங்கே போய் மகனோட இருங்க! உம் போங்க! தலைவலி, வயிற்றுவலி வரும். நான் இங்க இருந்தபடியே சுக்கை இடிக்கேன். ஒங்களுக்கு சுகமாயிடும். போங்க, இப்பவே போங்க! உங்களுக்கோ எனக்கோ ஏகாவது ஆச்சுதுன்னா லட்டர் வரும். சந்தோஷமாய் படிப்பேன். நீங்களும் அப்படியே படிக்கலாம். போங்க உம் சீக்கிரம்...”

கிழவரிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த முதியவளும், சிறிதுநேரம் பேசாதிருந்தாள். கோர இருட்டும், மெளடீகச் சூழலும், அவளைப் பயமுறுத்தின. தாம்பத்ய கால வாழ்வில் சேமித்த அனுபவங்கள் அவற்றின் இனிமை யான நினைவுகள் எல்லாவற்றையும் பறிகொடுத்தது போன்ற பரிதாபத்தில் அவள் துடித்தாள். புதிய உணர்வு களை காலியிடத்தில் சேமிக்க நினைத்தவள்போல் பேராசைப்பட்டாள். கணவரின் மெளனம் அவள் உள்ளத்தில் ஓலமிட்டது. “என்னங்க... என்னங்க” என்றாள் பதிலில்லை.

மெல்ல எழுந்தாள். கட்டில் கால் இடறி கீழே விழுந்தாள். நல்லவேளையாக அடி பலமில்லை. அடிப் பலமில்லாத அந்த முதியவள் இருந்தபடியே கால்களை முடத்தி போல இழுத்துக்கொண்டு கைகளை ஊன்றி ஊன்றி கணவர் இருந்த மூலையைப் பார்த்துத் தவழ்ந்தாள். தாழ்ந்துபோன வளாய், தவழ்ந்த அந்த முதிய குழந்தை மூலைக்குச் சென்று கணவரின் தோளில் கை போட்டபடி “என்னங்க... என்னங்க” என்றாள். அவள் கைகளில் ஈரம்பட்டது. ஏதோ ஒன்று கழுத்தை கட்டுவதுபோலிருந்தது. தன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/220&oldid=1369414" இலிருந்து மீள்விக்கப்பட்டது