பக்கம்:இன்னொரு உரிமை.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216 சு. சமுத்திரம்

மோகனா, வேர்த்துப் போன தன் முகத்தை, வியர்வைபட்ட கரங்களாலோய துடைத்துக் கொண்டாள். வைரவனோ, கிராதிக் கம்பிகளுக்குள்ளே லாக்கப் திலகம் போல் தூங்கிக் கொண்டிருந்தான். அந்தக் கிராதகக் கிராதி கதவு, உட்புறம் சங்கிலி போட்டுப் பூட்டப்பட்டிருந்தது.

மோகனா வெளியே கம்புத் துடைப்பத்தை எடுத்து, தலைகீழாகப் பிடித்து, கம்பு முனையை கிராதிக் கம்பிகளுக்கு இடையே விட்டு, அவன் இடுப்பில் லேசாகத் தட்டினாள். உள்ளங்கால்களில் சற்று லேசாக அழுத்தினாள்.

வைரவன் கத்திக் கொண்டே உடலைப் புரட்டினான். பிறகு அவளை அடிக்கப் போவதுபோல் கை கால்களைத் துள்ளியாட விட்டபடி எழுந்தான். மோகனா பயந்து விட்டாள். சர்க்கார் ஆபீஸ் மவராசனை இப்படிச் செய்தது தப்பு என்பதுபோல் கைகளைப் பிசைந்தாள். ஆனால் வைரவன் முகத்தில் இருந்த கோபம் ஒளி வேகத்தில்—அதாவது வினாடிக்கு ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் மைல் வேகத்தில்—போய், சிரிப்பும் அதே வேகத்தில் வந்து சுடர் விட்டது. சங்கிலிப் பூட்டைத் திறந்தபடியே பேசினான்.

“ஒன் முகம் அழகு மட்டுமல்ல மோகனா... ராசியான மொகம், ஒன் மொகத்துல விழிக்கனுமுன்னுதான் தூங்கிட்டு இருந்தேன். இதேமாதிரிப் போன வாரமும் தூங்கினேன் பாரு அப்போ நீ எழுப்புனே பாரு. அன்னிக்கி எல்லாக் கிராக்கியுமே எனக்குத் தள்ளுனாங்க. முப்பத் தாறு ரூபாய். இருபது ரூபாய் அதுக்கு அதுல ஒனக்குப் பத்து ரூபாய் எடுத்து வச்சிருக்கேன்...”

மோகனா அவனிடம் எதுவும் பேசவில்லை. சுருங்கிப் போன இரும்புக் கிராதிகளின் இடைவெளியில் நுழைந்து துடைப்பத்தை எடுப்பதற்காகக் குனியப் போனாள். துடைப்பத்தோடு எழுந்தபோது, அவள் தலை வைரவனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/225&oldid=1369489" இலிருந்து மீள்விக்கப்பட்டது