பக்கம்:இன்னொரு உரிமை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்ன மனிதர்கள் 217


மோவாயில் இடித்தது. மோகனா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். “ஏன் ஸார்... இப்படி ரோதனை செய்யுறே?” என்று கேட்க நினைத்தாள். முடியவில்லை. அவள் அந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த மூன்று மாத காலமாகக் கிடைக்கும் உபத் திரவம் இது. வைரவன் பெரிய உபகாரம் செய்தவன்போல் பேசினான்.

”நாளைக்குக் கதவுப் பக்கமாவே படுக்கேன். ஒன் கை யாலேயே எழுப்பிவிடு. என்ன மோகனா நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டுப் போறேன். நீ என்னை மதிக்காம...”

துடைப்பத்தோடு ஆபீஸர் அறைக்குள் போகப் போனவள், அவனை மதிப்பவள்போல் நின்றாள். “என் மனசு... ஒனக்கு ஏன் புரியமாட்டக்கு.” என்று அவன் மீண்டும் பேசியபோது, அவன் மதிப்பிற்குரியவன் அல்ல என்பதுபோல், மடமடவென்று உள்ளே போனாள். நேற்று ஆறு மணிக்கு ஆபீஸர் போன பிறகு, இப்போதுகூடச் சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறியை நிறுத்துவதற்கு ஒரு ஸ்விட்சை மேல்நோக்கி அவள் கரம் நகர்த்தியபோது, அவள் புறங்கையில் பாதியிடத்தை அழுத்தியபடி வைரவனின் கை டியூப்லைட் சுவிட்சைத் தட்டிவிட்டது. அவள் கையையும் விடாமல், தன் கையையும் எடுக்காமல், வைரவன் வசந்தமாகப் பேசினான்.

”இதுதான் பொருத்தம் என்கிறது. ஒங்கிட்டே வரப் :படாதுன்னுதான் நினைச்சேன். அதுக்காக லைட் போடாமல் இருக்க முடியுமா! அந்த ஸ்விட்சைப் போட் டால் இந்தக் கை ஷாக்கடிக்குது... சும்மா சொல்லப்படாது மோகனா. ஒன் கை இலவம் பஞ்சு மாதிரி இருக்குது.”

மோகனா தன் கையை வெடுக்கென்று எடுத்த பிறகும். வைரவன் ஸ்விட்ச் போர்டையே மெய்மறந்து தடவிக்கொண்டிருந்தான். ஓர் ஆணி பட்டு கைவிரல் ஒரத்தில் லேசான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/226&oldid=1369382" இலிருந்து மீள்விக்கப்பட்டது