பக்கம்:இன்னொரு உரிமை.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்ன மனிதர்கள் 219

 இந்தச் சிவப்பும் இந்தத் தோரணையும் எப்பவுமே மாறாது. எந்தக்காலத்துலயும் ஒன்னைப் பார்க்கிறவன் கண்ணுலதான் சுருக்கம் ஏற்படுமே தவிர ஒன் முகத்துலயோ, வவுத்துலயோ ஏற்படாது. ஆக மொத்தத்துல-ஒன்னை நான் எப்பவுமே சிஸ்டர்னு நினைக்க முடியாது.

“அப்போ ஒங்க சிஸ்டர் அழகா இருந்தால்?”

மோகனா, துடைப்பத்தில் தூசியைத் தட்டிவிடுவது போல் அந்தத் தரையில் அதைக் கடாசியடித்தாள். வைரவன் வெளியே வந்து பெஞ்சில் உட்கார்ந்து ஒரு சிகரெட்டை உறிஞ்சினான். மோகனா பேசிய பேச்சில் அந்த சிகரெட்டே தன்னை உறிஞ்சுவது மாதிரியான ஒரு பிரமை. அவளை எப்படி வழிக்குக் கொண்டு வரலாம் என்பது மாதிரியான சிந்தனையுடன், புகைந்துகொண்டிருந்தான்.

மோகனா அந்த அலுவலகத்தின் நாலாயிரம் சதுர அடி பரப்பையும் பெருக்கி முடித்து, ஒரு வாளி நிறையத் தண்ணி ரைக் கொண்டுவந்து ஒரு கலர்த் துணியை அதில் நனைத்து, குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடியே மொஸைக் தரையைத் துடைத்துக்கொண்டே போனாள். திடீரென்று வைரவ னிடம் இருந்து ஒரு அதட்டல்.

“ஏய் மோகனா! மொலைக் தரையைத் துடைக்கிற லட்சணமா? நூறு ரூபாய் மொத்தமா வாங்கத் தெரியுது. இந்தத் தரையை எப்படித் துடைக்கணுமுன்னு தெரியலியே! அதோ பாரு, தரையில ஈரம் படல. இதோ பாரு, நீ மெழுகுன லட்சணம். ஒரே தூசி தும்பு.” ஒழுங்காய் வேலை பார்க்கணுமுன்னால் பாரு! இல்லன்னா தீர்த்துக்கட்டிடுவேன். நீயல்லாம் முன்னப்பின்ன மொசைக் தரையைப் பார்த்திருந்தால்தானே!”

வைரவன், அவளை விட்டுப் பிடிக்க நினைத்தவன்போல் வெளியேறினான். அந்தச் சமயத்தில் மோகனாவுக்குத் தன் ஒட்டு மொத்தமான வாழ்க்கை அவலங்கள் அனைத்தும் முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/228&oldid=1369386" இலிருந்து மீள்விக்கப்பட்டது