பக்கம்:இன்னொரு உரிமை.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222  சு. சமுத்திரம்

 "இது புதுசா பெருக்கறதுக்குப் போட்டிருக்கிற லேடி ஸார்"

"ஐ ஸீ... இந்தாம்மா! இங்க வா, உன் பேரு என்ன? நீ இருய்யா ! அது பேசட்டும்."

"மோகனா சார்!"

"மிஸ்டர் ரமணன்! நீங்க இப்போ அஸிஸ்டென்ட் டைரக்டர் வீட்டுக்குப் போறீங்க. அப்படியே இங்கே அவரை டிஸ்கஷனுக்குக் கூட்டிட்டு வர்றீங்க... டூர் போறதுக்கு முன்னால் அவர்கிட்ட சில அந்தரங்க சமாசாரங்களைப் பேசணும்!"

ரமணன், போய்விட்டான். எள்ளும் சொள்ளுமாய் இருந்த ஜான்சன் எலுமிச்சம்பழம்போல் ஒரு குளிர்ப்பதனப் பார்வையை வீசினார்.

"இப்படி வா மோகனா... ஏன் பயப்படுறே! ஆபீஸ்லே ஒனக்கு ஏதாவது பிரசினையா?"

"எனக்கு வேலை காயமாகணும். யாரு பேச்சையும் கேட்காமல் அய்யா என்னை இந்த வேலையில வச்சிருக்கணும்."

"நீ சொல்றதைப் பார்த்தால் வாட்ச்மேன் ஏதும் கலாட்டா பண்ணுறானோ? ஏன் பேசமாட்டேங்கேற! டோன்ட் ஒர்ரி. அவனை வேற இடத்துக்கு மாத்தப் போறேன்!"

"அதெல்லாம் தேவையில்லீங்க ஐயா இந்த வேலையி லிருந்து என்னை நீக்காமல் இருந்தாப் போதும்." கூனிக் குறுகியபடி நின்றாள். பாவம் டெப்டி டைரக்டர் ஜான்சனுக்கு மனசும் கேட்கவில்லை, கையும் கேட்கவில்லை. "இனிமேல் உன் கவலையை என் கிட்டே விட்டுவிடு. உன் னோட எதிர்காலத்துக்கு நான் பொறுப்பு." என்று சொன்னபடியே அவளருகே போய்த் தோளில் கை போடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/231&oldid=1368942" இலிருந்து மீள்விக்கப்பட்டது