பக்கம்:இன்னொரு உரிமை.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228  சு. சமுத்திரம்


"பையனுக்கு என்ன வேலை?"

"ஒரு கம்பெனில ரெண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான். சம்பாதிச்சு என்ன பிரயோஜனம்? வீட்ல விளக்கேத்தி வைக்க ஆள் வேண்டாமா?"

"சின்ன வயதிலேயே ரெண்டாயிரம் ரூபாய் சம்பளமா!"

"அதுக்குத் தான் திறமை வேணுங்கிறது. இவரை மாதிரி இருந்தால் ஆயிரத்தைக் கண்ணால கூட பார்க்கமுடியாது. நல்ல பையன். ஆனாலும் ஒரு உண்மையைச் சொல்லிடணும்."

"சும்மா சொல்லுங்க."

தப்பா நினைக்கப்படாது; பையனுக்கு நாற்பதுக்கு உள்ள தான் இருக்கும். போன வருஷம் அவன் வீட்டுக்காரி இறந்துவிட்டாள். ரெண்டே ரெண்டு பிள்ளைங்கதான். பையன் தங்கம்னா தங்கம். இந்தமாதிரி இடம் கிடைக்கிறது கஷ்டம்."

காமாட்சியம்மாள் நீர் முட்டிய கண்களை வேகமாகத் துடைத்துக்கொண்டே, அமைதி கலந்த ஆவேசத்துடன் கேட்டாள் :

"ஒங்க பொண்ணு விஜயாவைக் கொடுக்கலாமே?"

வந்தவளுக்கும், அவளுடன் வந்தவருக்கும், கண்கள் சிவந்தன. "எங்க விஜயாவும் ஒங்க வித்யாவும் ஒன்றாயிடுமா?" என்று கேட்கப் போனவள், கோபத்தை அடக்கிக் கொண்டு. "ஒங்களுக்கு இஷ்டமில்லைன்னா விட்டுடும் களேன்... எதுக்காக என் பெண்ணை இழுக்கறீங்க," என்றாள்.

காமாட்சி மீண்டும் அமைதியாகப் பேசினாள்.

"உங்க பெண்ணுக்கே அப்படி நடக்கிறதாக இருந்தாலும், அதைத் தடுக்கிற முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்... தப்பா நினைக்கப்படாது. ஒங்க பொண்ணு வேறே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/237&oldid=1368899" இலிருந்து மீள்விக்கப்பட்டது