பக்கம்:இன்னொரு உரிமை.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230  சு. சமுத்திரம்

 ரு வாரம் ஓடியது.

ரவியின் அம்மா மீனாட்சி வீட்டுக்கு வந்தாள்.

"வர்ர வெள்ளிக்கிழமை ரவியோட பர்த்டே ...வீட்டுக்கு. வித்யாவைக் கூட்டிக்கிட்டு வாங்க. வித்யாவுக்கு நல்ல காலம் பிறக்குது" என்றாள்.

காமாட்சி அவளைக் குடுகுடுப்பைக்காரியைப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டே, "நீங்க சொல்றதைப் பார்த்தால்..." என்று இழுத்தபோது, 'பேசாமல் வாங்க... ரவிக்கும் ஆசீர்வாதம் பண்ணுனாப்போல இருக்கும். வித்யா நீ ஏண்டி பெரியவங்க பேசுறதை ஒட்டுக் கேட்கிறே? 'போ போ' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

காமாட்சி, வித்யாவை அர்த்தபுஷ்டியாகப் பார்த்து விட்டு, "அப்பாவைப் போய்க் கும்புடு" என்றாள்.

வித்யா, டில்லியில் படிக்கும்போது, விடுமுறையில் அங்கு வந்திருந்த ரவியைக் 'சொஞ்சம் கர்நாடகம்' என்று நினைத்திருந்தாலும், அவனிடம் உள்ளத்தைப் பறி கொடுத்திருந்தாள். அவளையும், அவள் பேசும் ஆங்கிலத்தையும் கண்டு, கேட்ட ரவிக்கு, சற்றுத் தாழ்வு மனப்பான்மைகூட ஏற்பட்டது, ஆனால், வித்யா, அவனைச் சொல்லுக்குச் சொல் 'ரவி டியர்...ரவி டியர்' என்று சொன்னதால், தன்னம்பிக்கை ஏற்பட்ட ரவி, ஒரு நாள் ஒரு அழகான காதல் கடிதத்தை எழுதி, அவள் வேறு பக்கம் பார்த்தபோது, அவள் நோட்டுக்குள் வைத்துவிட்டு, காட்ரெஜ் பீரோவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டான், தற்செயலாக நோட்டைத் திறந்த வித்யா - இது என்ன டமில் ஸ்கிரிப்ட் மாதிரி இருக்கு டாடி... நீங்களா இதை வச்சிங்க?' என்று சொல்லிக் கொண்டே அந்தக் காகிதத்தை ஏந்திக் கொண்டு அப்பா விடம் போகப்போனவளை, ரவி தற்காப்பை முன்னிட்டு கையைப் பிடித்து அவள் தோளைத் தன் பக்கம் லேசாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/239&oldid=1368869" இலிருந்து மீள்விக்கப்பட்டது