பக்கம்:இன்னொரு உரிமை.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உறவுக்கு அப்பால்235


காமல் இருக்கமுடியாது என்பதுக்காக இங்கே குடும்பத்தைக் கூட்டி வந்தேன். இப்போ உங்களைப் பார்க்கக் கூடாது என் சிறதுக்காகவே பழையபடியும் டில்லிக்குப் போகப் போறோம். அங்கே வேலையில சேரப்போறேன். தாங்க் யூ மிஸ்டர் ரவி, வரட்டுமா?"

ரு வாரம் ஓடியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டில்லி ரயிலுக்கு மணியடிக்கப்பட்டது. இரண்டாவது வகுப்புப் பெட்டியில் வித்யா, அவள் தம்பிகள், காமாட்சியம்மாள் உட்கார்ந்திருந்தார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஸ்டேஷனில், இதே இவர்களுக்கு இருந்த உறவின் ஆர்ப்பாட்டம் இப்போது இல்லை, போய்ச் சேர்ந்ததும் ஒரு டெலகிராம் போடுங்க. உங்களை விட்டுட்டு எப்படித்தான் இருக்கப் போறோமோ' என்ற பிரிவு வார்த்தைகள் பேச ஆளில்லை. அழுவதற்கு அத்தைகள் வரவில்லை. கலங்குவதற்கு சித்தப்பாக்கள் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக கண்ணடிக்க ரவியில்லை.

என்றாலும் 'யாரும் இல்லாமல் போகவில்லை' என்று காட்டுவதுபோல், வித்யாவும் அவள் குடும்பத்தினரும் கம்பீர மாக நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார்கள்.



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/244&oldid=1368850" இலிருந்து மீள்விக்கப்பட்டது