பக்கம்:இன்னொரு உரிமை.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கோமதியின் கதை

'உங்களிடம் ஒரு கதை இருக்கிறதா?' என்று குமுதம் கேட்டிருந்தது. ஏராளமான வாசகர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை எழுதியிருந்தார்கள்.

குமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த கோமதி தன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறியிருந்தார். அதை மையமாக வைத்து, சிறுகதையை எழுதியிருக்கிறார். இதற்காகவே தக்கலைக்குச் சென்று கோமதியைச் சந்தித்துப் பேசினார், சந்திப்புப் பற்றிச் சமுத்திரம் கூறுகிறார்:

"சின்னஞ்சிறிய வீடு-அதுவும் வாடகை வீடு. கோமதியும் அவரது குழந்தைகளும் அன்புடன் வரவேற்றார்கள். கோமதியிடம் அவரின் அனுபவத்தை மெல்லக் கேட்டேன். ஆரம்பத்தில் அதை இயல்பாக விளக்கிய அவர், இறுதியில் கண் கலங்கச் சொன்னார், ஒருமணி நேரத்திற்குப் பிறகு, விடைபெற்றுக் கிளம்பினேன். அந்தக் குடும்பத்தினர் காட்டிய அன்பை மறப்பதற்கில்லை. என்னைப்பற்றி எதுவுமே தெரியாத அவர்கள் காட்டிய பாசத்தில் முழுக்க முழுக்க, நனைந்தேன்.

ஒருவரை நேரில் சந்தித்து அவரது அனுபவத்தைக் கண்டறிந்து கதையாக எழுதுவது சாத்தியம்தானா என்ற சந்தேகத்துடன் தான் நாகர்கோவில் புறப்பட்டேன். ஆனால், ஓர் இயல்பான குடும்பத்தின் யதார்த்தமான தரிசனம், பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/25&oldid=1369526" இலிருந்து மீள்விக்கப்பட்டது