பக்கம்:இன்னொரு உரிமை.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18  சு. சமுத்திரம்


மாமியாருக்கு அருகே நின்று கொண்டு கோமதி தலையைச் சொறிந்தாள். பிறகு "அம்மாவைப் பார்த்துவிட்டு வந்துடட்டுமா?" என்றாள்.

மாமியார்க்காரி, 'ஏன் பேசாமல் நிக்கறே' என்றாள்.

தான் சொன்னது, தனக்குத்தான் கேட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட மருமகள், அந்தப் பெரிய மனுஷியைப் புரியாதவள் போல் பார்த்துக்கொண்டு "அம்மாவை..." என்று சொல்வதற்காக அடித்தொண்டையை ஈரப்படுத்தியபோது கன்றுக்குட்டி எவ்வளவு நேரமாய்ப் பால் குடிக்குது! அதத் தொழுவுல கொண்டு கட்டிப்போடு! உம்... சீக்கிரம்" என்று மாமியார் நிதானமாக உறுமியபோது மாமியார் சொன்னதைச் செய்துவிட்டு. அதற்குப் பிறகே அவளிடம் வரங்கேட்க நினைத்தவளாய்க் கோமதி கொல்லைப்புறம் போய், பசுங்கன்றை இழுத்துப் பிடித்து. இன்னொரு இடத்தில் குடியமரச் செய்துவிட்டு, ஓட்டமும் நடையுமாக நடைவாசலுக்கு வந்தாள்.

மாமியார் தெருக்கோடிக்குப் போய்விட்டார். பின் தொடர்ந்து போய்க் கேட்க முடியாது, கேட்டால், கேட்கக்கூடாத பதில் கிடைக்கும். 'வழிமறிக்க வந்துட்டியோ' என்று சொல்லலாம். 'நாங்கள்ளாம் ஆட்களாத் தெரியலியா?' என்று கேட்கலாம். அதுவும் தெருவில் உள்ள எல்லாரும் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்பது போல் மாமியார் சத்தம் தொடுக்கலாம்.

மாமியாரிடம் கேட்டுவிடுவது என்று விடியவிடிய நினைத்துத் தூங்குவதும், 'அம்மா' என்று சொல்லிக் கொண்டே எழுவதுமாக இருந்தவள். அம்மாவின் ஒருமணி நேரப் பிரிவில் கூட வாடி வதங்கியவள். போனவருடம். திருமணமாகி, கணவனுடன் இந்த ஊருக்குப் புறப்பட்ட போது, அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டே அழுதவள். அவளைப் பிரிய விரும்பாதவள் போலவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/27&oldid=1369538" இலிருந்து மீள்விக்கப்பட்டது