பக்கம்:இன்னொரு உரிமை.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24 சு. சமுத்திரம்

கோமதி ஒன்றும் புரியாதவளாக அண்ணனின் தோளை உலுக்கிக்கொண்டே, “என்னண்ணா... ஏன் இப்படிப் பார்க்கிறே?” என்றாள்.

அண்ணன் மடமடவென்று ஒப்பித்தார். “அம்மாவுக்கு ராத்திரி ஆஸ்த்மா அதிகமாகி... ஆஸ்பத்திரிலே சேர்த் திருக்கோம்... இனிமே... இனிமே... பிழைக்கறது கஷ்டம். ஒவ்வொரு மூச்சுக்கும் கோமதி கோமதின்னு புலம்பறாள். அவளோட அவஸ்தயப் பார்க்க முடியல... ஒன்னைப் பார்த்தால்தான் அவள் நிம்மதியாச் சாவாள்!”

கோமதி முன் நெற்றியில் கைவைத்து நிலைகுலைந்து, மறுகி நின்ற அண்ணனையே ஆறுதலாகப் பற்றிக்கொண்டு ஸ்தம்பித்தாள். அங்கே நின்ற அண்ணன், அவனைக் கொண்டுவந்த கார், ஓட்டிவந்த டிரைவர் அக்கம்பக்கத்து வீடுகள் ஆகிய அனைத்துமே மாயமாய் மறைந்து, தன்னைப் பெற்றெடுத்த அம்மா மட்டுமே அங்கே விஸ்வரூபம் எடுத்தவளாய் வானுக்கும் பூமிக்கும் வளர்ந்தவளாய், அவளை ‘வா வா’ என்று இருகரம் நீட்டி அழைப்பவளாய்த் தோன்றினாள்.

சிறிது நேரம், அப்படியே அசையாது நின்றவள், அண்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “அம்மா... அம்மா...” என்று விம்மினாள், பிறகு “என் அம்மாவைக் கொன்னுட்டாங்களா?” என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் கத்திவிட்டு அண்ணனை விட்டு அகன்று, வாசல் கதவில் தலையைக் கொண்டு போய் மோதினாள்.

அண்ணன் அவளைத் துரக்கி நிறுத்தி, தன்னோடு சேர்த்து லேசாக அணைத்துக்கொண்டு, “சரி... அழுது என்ன பிரயோசனம்? சீக்கிரமாய்ப் புறப்படு...” என்றார்.

அப்போதுதான் ஓரளவு சுயநினைவுக்கு வந்த கோமதி, வீட்டின் உட்பக்கத்தை வெறுமையாகப் பார்த்தாள். பிறகு தன்னை மறந்தவளாய், “அம்மா பிழைப்பாளா அண்ணா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/33&oldid=1369582" இலிருந்து மீள்விக்கப்பட்டது