பக்கம்:இன்னொரு உரிமை.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32 சு.சமுத்திரம்

சொல்லிப் பலன் பெறாத வடிவு, இந்தத் தடவை அப்படிக் கேட்காதது அய்யாவுக்கு ஆறுதலாக இருந்தது. இதற்குள்,அம்மாக்காரி வெளியே வந்து ஒரு ‘சாக்கை’ எடுத்துப் போட்டுக்கொண்டு முடங்கினாள். முத்தையா மனைவியின் முகத்தில் வீடு முழுவதும் நிறைந்திருந்த ஈக்களில் ஒன்றுகூட ஆடவில்லை. பக்கத்து வீட்டுத் தாத்தாவுக்கு ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. முத்தையாவின் மகளைப் பார்த்து “உள்ள போயி பிள்ள எப்படி இருக்குன்னு பாத்துட்டு வாம்மா” என்று சொன்னார். அந்தச் சிறுமி பத்து நிமிடம் கழித்து வந்து “அத்த மவன் அழகா இருக்கான்... நான்தான் அவன கட்டிக்குவேன்” என்று சொன்னதில் அய்யாசாமி திருப்தியடைந்தாலும் முத்தையா திருப்தி அடையவில்லை. அம்மாவைப் பார்த்து, “என்னம்மா, ஒருமாதிரி படுத்திருக்கே? பிள்ளக்கி ஏதாவது...” என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு பேச முடியாமல் திணறினான். ‘நொண்டி மூக்கறையா பிறந்திருக்குமோ!’

“பிள்ளக்கி என்ன... நல்லாத்தான் இருக்கு.” என்று சொல்விக்கொண்டே, அவன் அம்மாக்காரி வேறுபுறமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டு கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள்.

ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்.

மருமகள்காரி, மாமியாரிடம் வந்தாள்.

“வாங்கத்தே சாப்பிடலாம் இந்த வயசுல பட்டினி கிடந்தா உடம்புக்கு ஆவாது. ஒரு வாயாவது சாப்பிடுங்க.”

மருமகள்காரியின் கரிசனம், மாமியார்காரிக்குப் புரியவில்லை. “தின்னுட்டுப் படுக்கவேண்டியதுதான். சாப்புடுறதுக்குத் தாங்கணுமாக்கும்.” மருமகளின் புதிய கரிசனம், சோகத்தைச் சற்றுக் குறைத்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். ‘வட்டில்’ உட்கார்ந்திருந்த மகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/41&oldid=1388333" இலிருந்து மீள்விக்கப்பட்டது