பக்கம்:இன்னொரு உரிமை.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36 சு. சமுத்திரம்

“தானாச் சாவுறத, நீ எதுக்கும்மா சாகடிக்கனும்?”

“இந்த நாலு நாளுல முத்தையாவுக்கு ஏதாவது வந்துட்டா?”

பாக்கியம் காதுகளைப் பொத்திக்கொண்டாள். வேறு பக்கமாகப் படுத்துக்கொண்டு குலுங்கக் குலுங்க அழுதாள். கிழவியின் நடுங்கும் கைகள் குழந்தையின் கழுத்தை நோக்கிப் போயின. அப்போது-

முத்தையா தன் மனைவியை தரதரவென்று இழுத்துக் கொண்டு உள்ளே வந்தான். அவன் இடுப்பில் இருந்த மூன்று வயதுப் பையன் துரை, தூக்கக் கலக்கத்தில் அப்பனின் தோளில் விழுந்துகொண்டும், பிறகு தலையைத் திடுக்கிட்டு எடுத்துக்கொண்டும் இருந்தான். அய்யாவு தாத்தாவும் தள்ளாடிக்கொண்டு வந்தார். கிழவி கைகளைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டாள்.

முத்தையா, கிழவியின் கைகளைப் பார்த்துக்கொண்டே நிதானமாகப் பேசினான்:

“ஒஹோ இவன் இருந்தா நான் இருக்கமாட்டேனா, அப்படின்னா தங்கச்சி மவன கொன்னுட வேண்டியதுதான். ஆனால் ஒண்னு இன்னா... இடுப்பில் இருக்கானே இவன் ஜாதகப்படி இவனுக்கு மூன்று வயசுல அப்பனுக்குக் கொள்ளி போடணுமாம். இவனுக்கு நான் கொள்ளி போட்டுட்டா அவன் எனக்குக் கொள்ளி போட முடியாது. அதனால இவனையும் கொன்னுடுறேன்!”

முத்தையா இடுப்பில் இருந்த மகனைத் தரையில் இறக்கிவிட்டு அவன் கழுத்தை நெறிப்பதுபோல் ‘பாவலா’ காட்டினான். அவன் மனைவி பதறிப்போய்ப் பையனைத் தூக்கிக்கொண்டு வெளியே போகப் போனாள். அப்படிப் போனவளின் தோளைப் பிடித்து நிறுத்திவிட்டு, “உன்ன மாதிரிதாண்டி என் தங்கச்சிக்கும் இருக்கும். அறிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/45&oldid=1388339" இலிருந்து மீள்விக்கப்பட்டது