பக்கம்:இன்னொரு உரிமை.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகலில் சென்னை


ந்த பல்லவ பஸ்ஸுக்குள் என்ன காரணத்தாலோ ஏற்பட்ட கலாட்டா, வெளியேயும் பரவி அதன் பலனாக பஸ்ஸின் முன் கண்ணாடி கல்லெறிபட்டு பாளம் பாளமாகவும், சுக்கல் சுக்கலாகவும் தெறித்தபோது-

பயணிகளில் சிலர் தைரியசாலிகள் பஸ்ஸின் முன் வாயில் வழியாகக் குதித்தார்கள். மற்றும் பலரோ வெளியே போகமுடியாமலும், உள்ளே இருக்க முடியாமலும் நிலை குலைந்து தவித்தார்கள். பெண்களின் ஒப்பாரியும், குழந்தைகளின் கூக்குரலும் ஆண்களின் அலை மோதலுமாய் அமளி நிலவியபோது-

பஸ்ஸுக்கு உள்ளேயே தூக்கித் தூக்கிப் போடும் பின்னிருக்கையில் இருந்த வேதா, கிட்டத்தட்ட அழத் துவங்கி விட்டாள். கல்லூரியில் படிப்பவள். அரசியல் ஆர்ப்பாட்டங்களைப் பார்த்தவள். என்றாலும், இவ்வளவு நெருங்கிய தூரத்தில் கல்லெறி கலாட்டாக்களைப் பார்க்காதவள். வழியெங்கும் கண்ணாடித் தோட்டாக்கள் அவளை நோக்கிப் பாய்வது போலிருந்தது. ஒவ்வொரு கண்ணாடித்துண்டு பாய்ச்சலுக்கும் ஒவ்வொரு ‘அம்மா’ போட்டாள். இவ்வளவுக்கும் அவள் சிறுமியல்ல. பத்தொன்பது வயதுக்காரி. நோஞ்சானும் அல்ல. கல்லெறியை ஓரளவு தாங்கிக் கொள்ளும் அளவில் அமைந்த மேனிக்காரி. அவள் உச்சந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/48&oldid=1388346" இலிருந்து மீள்விக்கப்பட்டது