பக்கம்:இன்னொரு உரிமை.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46 சு.சமுத்திரம்

ரைட்டர் பதவித் தோரணையில் பேசினார்:

“இதோ பாரும்மா! நீ எது பேசணுமுன்னாலும் இன்ஸ்பெக்டர்கிட்டேதான் பேசணும்.”

“ஸார் நான் என்ன சொல்ல வந்தேன்னா...”

“சொல்லவேண்டியதை இன்ஸ்பெக்டர் கிட்டேதான் சொல்லனும்.”

“அவர் எப்போ வருவார்?”

இப்போ வரலாம்! சாயங்காலம் வரலாம்! வீட்டுக்குப் போனாரோ. பீட்டுக்குப் போனாரோ!

“அப்போ!”

“அதுவரைக்கும் நீ இங்கேயே உட்காரணும்.”

“எங்கப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சா!”

“சரிதான் உட்காருமே! நீ யாரோ.. எவேளா.. எது வேணுமுன்னாலும், இன்ஸ்பெக்டர் வந்து ரிகார்ட் செய்வார். இந்தண்ட அந்தாண்ட நகராமல் இங்கேயே இரு இல்லன்னா உள்ளே தூக்கிப்போட்டுடுவேன்... ஏய் டு நாட் ஒன்.”

வேதாவுக்கு, பயம் பிடித்தது. அந்த பயமே பீதியானது. கைகால்கள் ஓடப்போவதுபோல் ஆடின. இதற்குள் ஒரு டெலிபோன். ரைட்டர் இன்ஸ்பெக்டர் அறைக்குள் ஒடிப் போய் டெலிபோன் குமிழைத் தாவிப் பிடித்தபோது, லாக்கப்வாசிகள் அவளை ‘போயிடு, போயிடு’ என்பது போல் சைகை செய்தார்கள்.

வேதா, அந்த காவல் நிலையத்தை விட்டு பூனைமாதிரி நகர்ந்தாள். பிறகு போலீசுக்கு அகப்படாமல் இருப்பதற்காக சந்துபொந்துகளில் ஓடினாள். அப்போது ஒரு சிலர் அவளைச் சந்தேகமாகப் பார்த்தபோது, ஓட்டமும் நடையுமாக நடந்தாள். முட்டுச்சந்து மூடச்சந்து, முடியாத சந்து என்று சந்து சந்தாகவும், ஒண்ணாவது தெரு, இரண்டாவது குறுக்கு, நாலாவது லேன் என்று தெருத்தெருவாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியும், அப்படித் திரும்பினால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/55&oldid=1388397" இலிருந்து மீள்விக்கப்பட்டது