பக்கம்:இன்னொரு உரிமை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

அவர்களிலே சு. சமுத்திரமும் ஒருவர்.

ஆளுக்கொரு பத்திரிகையை வைத்துக்கொண்டு, தேசியத் தலைவர்களைத் தாறுமாறாகத் தாக்கி எழு திக்கொண்டிருந்தவர்களை எதிர்த்து, மேடைக்கு மேடை; எழுத்துக்கு எழுத்து; பேச்சுக்குப் பேச்சு; நாடகத்துக்கு நாடகம் என்று பல முனைகளிலும் அவர்களுக்கு பதிலடி கொடுத்துக்கொண்டிருந்த தேசிய முழக்கம் குழுவில் சமுத்திரமும் ஒருவர்.

அப்போது அவர் கல்லூரி மாணவர். அந்தக் கால கட்டத்திய மாணவர் உலகம், திராவிட மாயை யில் சிக்கித் திக்குமுக்காடிக் கொண்டிருந்தபோது, "வாள்வீச்சு போன்ற தன் மேடைப்பேச்சுத் திறனால் ஏராளமான கல்லூரி மாணவர்களை தேசியமேடைக்கு அழைத்து வந்து பெருந்தலைவர் காமராஜ ரின் பாராட்டைப் பெற்றார்.

மகா கவி பாரதியைக் கோழை" என்று எழுதிய தமிழ்வாணனுக்குக் க வி ைத யிலேயே பதிலடி கொடுத்து 'வளைந்த தெங்கு' என்று ஒரு கவிதை எழுதினார். அதுதான் அவர் எழுதிய முதல் கவிதை. ஆரம்பமே அவர் எழுத்தில் ஒரு கோபம் இருந்தது. அது இன்னும் அடங்கவே இல்லை என்பதை அவரி ைஇந்தச் சிறுகதைத் தொகுப்பிலும் காண முடி கிறது.

நாங்கள் அரசியல்வாதிகளின் பொய்ப் புனைச் சுருட்டுப் பேச்சுகளுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுத்தால், சமுத்திரம் கதைகள், கவிதைகள் மூல மாகவே சந்திப்பார். முதல் கவிதையாக வளைந்த தெங்கு எழுதியவர், முதல் கதையாக 'முட்கலூர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/6&oldid=954023" இலிருந்து மீள்விக்கப்பட்டது