பக்கம்:இன்னொரு உரிமை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 சு. சமுத்திரம்

"பாவம் சாப்புடப் போன மனுஷன, தடுத்திட்டியே!"

'இவன் வாய அடச்சா, இவன் பிள்ளக்குட்டி வாய திறக்கலாம், நான் அதத்தான் செஞ்சேன்.'

'எப்பவுமா சாப்புடுறார்... ஏதோ இன்னையப் பாத்து ஆச வந்துட்டு....'

'நம்மள மாதிரி ஆளுங்களுக்கு, இந்தமாதிரி ஆச வரப்படாது சாமி! எனக்கு மட்டும் ஆசயில்லியா... பரிதாபத் ஷதுக்கு வேணுமுன்னால் வாரிகளா... முப்பது தோசய தின்னு காட்டுறேன்! நான் எதுக்கு சொல்லுரேன்னா... இன்னைக்கி தோசன்னா, அப்புறம் பீடி பிடிக்கது மாதுரி அது ஒரு பழக்கமாயிடும். அதனால தான். ஏய்.... வேணுமுன்னா சாப்புடுப்பா! என் காசுலயா சாப்புடுற!'

'வேண்டாம்பா, ஆசைய அடக்கணுமுன்னு நேத்துதான் வாரியார் கோவுலுல சொன்னாரு. நமக்கு இருக்க ஒரே ஆச பசியாவ வாட ஆசதான். நாமளும் நம்ம பங்குக்கு அது அடக்காண்டாமா? அடக்கியாச்சு. ஏ, வாடாப்பூ! நேத்து ஒங்கப்பன் ஒன்ன அடிச்சானா?'

'தப்பு மச்சான் இந்தப் பயமவா அவர அடிச்சிருப்பா.

வாடாப்பூ, வட்டியோடு கொடுத்தாள்.

'மாமா, பொண்டாட்டிகிட்ட அடிபடுற பழக்கத்த எப்படிச் சொல்றாரு பாரு!'

'பொண்டாட்டிங்க எங்க அடிக்கிறா! அவளுவளவும் நம்மையும் சேர்த்து ரேஞ்சர்லா அடிக்கான்!'

'ஏ, வாடாப்பூ! நீயாச்சு; என் மாமாவாச்சு. என்னை ஏண்டி இழுக்கற; கல்யாணம் ஆவு முன்னே ஒனக்கிருக்கிற ஆச இப்படியா இருக்கணும்! அது நான் செய்த தவாச சொல்லணும்!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/61&oldid=1388591" இலிருந்து மீள்விக்கப்பட்டது