பக்கம்:இன்னொரு உரிமை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெட்டி மனிதர்கள்53


'சரி, பொறப்படுங்க. நேரமாவு துல்லா. சீக்கிரமா வந்துருணும். வழில அவனுக பாத்துட்டா, அவனுக வீட்டு வரைக்கும் நம்மள நடக்க வச்சு, விறகுக் கட்ட விடுவாங்கல்லா....'

எல்லோரும் எழுந்தார்கள். திடீரென்று ஒருத்தி 'அதோ தேளு' என்றாள். குரலில் எவ்வித கலக்கமும் இல்லாமல், அவள் சொன்னவிதம் நல்ல பாம்பாக இருந்தாலும் அப்படித் தான் ஒரு வேளை சொல்லியிருப்பாள். சிதம்பரம், தேளைப் பார்ப்பதற்கு முன்பே ஒருவர் ஓலையில் ஏறிய அதை ஓலையோடு எடுத்து, வெளியே கொண்டு போனார். 'ஜாக்கிர தையா பிடி... இது கருந்தேளு! கடிச்சா. உயிருல நிக்கும்' என்றார் ஒருவர்.

எல்லோரும் எழுந்து புறப்பட்டார்கள். ஒவ்வொருவரும் கமண்டலம்மாதிரி அமைப்புள்ள பெரிய கம்பை வைத்திருந்தார்கள். ஒளிக்கற்றை ஊடுருவாத அதிகாலைப் பொழுதில் பூச்சிப் பொட்டுக்கள் இருக்கிறதா என்று முன்பாதைப் புதரை குத்திப் பாக்கவும், மலையில் இருந்து விறகுக்கட்டுக்களோடும், புல்கட்டோடும் இறங்கும்போது, தலைச்சுமை வலியாக மாறும் போது இந்த கம்பின் கமண்டலப் பகுதியில் சுமையை இறக்கி வைத்து சிறிது இளைப்பாறவும், இந்தக் கம்புகள் பயன்படுகின்றன.

சிதம்பரம் எதையோ நினைத்துக்கொண்டு, அந்த நினைலை உதறிவிடுபவன் போல், தலையை உசுப்பிவிட்டுக் கொண்டான். தோசை சாப்பிடப் போனவரை, இன்னொருவர் தடுத்தவுடனேயே, அவனுக்கு வியாபாரம் போய் விட்டதே என்பதைவிட, அதைப் பசிக்காரருக்கு பறிமாற முடியவில்லையே என்று வருத்தப்பட்டான். நினைத்துப் பார்த்தபோது, அவரின் உள்விழுந்த கண்களும், விழுது விட்ட மோவாயும், ஏக்கமான பார்வையும், அவனுக்கு என்னவோ போலிருந்தது. திடீரென்று ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன்போல், தம்பியைப் பார்த்துப் பேசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/62&oldid=1388595" இலிருந்து மீள்விக்கப்பட்டது