பக்கம்:இன்னொரு உரிமை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 சு. சமுத்திரம்

இதற்குள் விறகுக் கட்டுகளுடன், மலையிலிருந்து மனித உருவங்கள் இறங்கின, கட்டை சுமந்து கட்டையாய்ப்போன அந்த மனிதர்கள். கடைக்கு வந்ததும் விறகுக்கட்டுக்களை இறக்கினார்கள். ஒருவன் பாய்லருக்கு அருகே கட்டைப் போட்டான். சிதம்பரம் எதோ சொல்லப்போனான். 'கட்டை எடுத்து வெளிய போடுய்யா' என்று கேட்கப் போனான். கட்டு கொண்டு வந்தவர், குனிந்து கால் பாதத்தில் தாங்கியிருந்த ஒரு முள்கட்டையை ஊக்கால் குத்திக்கொண்டே வலி பொறுக்காதவர் போல் 'எப்பாடி’ என்றபோது, சிதம்பரத்திற்கு கேட்கப்போனதை கேட்க முடியவில்லை.

இதற்குள், காட்டிலாகா ஜீப் வந்து உறுமியது, சிதம்பரம், ஏழெட்டு கலர் பாட்டில்களோடும், ஆறேழு சோடா பாட்டில்களோடும் ஒடினன். ஒருவேளை இதுக்குக்கூடவா காசு கொடுக்கமாட்டாங்க. கேக்கலாமா... தந்தா வாங்கிக்கலாம், கேட்டு அந்த கட்ட பிரிடான்னு கேட்டாங்கன்னா ஒருவேள அதுக்குள்ள சந்தனக்கட்ட இருக்கலாம்! முந்தாநாள் ராமசுப்புவ, போட்டு போட்டு பூட்ஸ் காலால உதச்சாங்களே.

ஜீப் போய்விட்டது. விறகுக் கட்டுக்களைச் சுமந்து வந்தவர்களும், டீயை குடித்துவிட்டு, பஜாரைப் பார்த்துப் போனார்கள். விறகுக்கு இந்த மலையேறிகளுக்கு மூன்று ரூபாய் கிடைக்கலாம். உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்கும் 'கட்டைத் தொட்டிக்காரர்களுக்கு' ஆறு ரூபாய் கிடைக்கும். அவர்களுக்கும் சேர்த்து இவர்கள் மலையேறுகிறார்கள். இவர்களுக்கும் சேர்த்து, அவர்கள் சாப்பிடுகிறார்கள்.

பிறகு வெட்டி மனிதர்கள் போய்விட்டார்கள். உச்சி வெயில். இனிமேல் கூட்டம் கூடாது, சாயங்காலம் ஒரு சிலர் வருவார்கள், அவர்களுக்கு 'டீ' மட்டும் போதும். சிதம்பரம் பாய்லரை இறக்கி வைக்கப்போனான். பிறகு 'டீ' குடித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/67&oldid=1368927" இலிருந்து மீள்விக்கப்பட்டது