பக்கம்:இன்னொரு உரிமை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 சு. சமுத்திரம்



திடீரென்று கூட்டத்தில் ஒருவருடைய குரல் கம்பீரமாக ஒலித்தது.

'ஒன்ன குளோஸ் பண்ணவும் அதிகநேரம் ஆவாது! எங்கள செக் பண்ண ஓங்களுக்கு என்னடா உரிமை இருக்கு.

இன்னொருவர் எழுந்தார்.

"ஏண்டா பேசுர... தேவடியா மவனுவள! தூணுல வச்சுக் கட்டுங்க! முந்தா நாளு, நம்ம... பொன்னம்மா கிழவிய அடிச்சிருக்கா. நேத்து நம்ம ராமன செருப்ப வச்சே மூஞ்சில அடிச்சிருக்கான். இவன் கடையை, ஒசில தின்னுதின்னே உருப்படாமப் பண்ணிட்டான், இனுமயும் நாம பொறுத்தால் இவங்க நம்மள அடிச்சத நியாயப்படுத்துறதா ஆயிடும்.

வேகமாக வெளியேறப் போன இரண்டு அதிகாரிகளையும் சிதம்பரம் இன்னைக்கி எல்லாக் கணக்கையும் தீர்த்தாகனும் என்று சொல்லிக்கொண்டே கைநீட்டி வழிமறித்தான். இதுவரை மெளனத்தையே ஒரு பண்பாக போற்றி வந்த சிதம்பரத்தின் காடு தாங்காத சினத்தில் தொத்திக் கொண்ட அத்தனை ஏழை-பாழைகளும் சேர்ந்தாற்போல் எழுந்தார்கள். ஒருவன் சிறுவனின் கைக்கட்டை அவிழ்த்து விட்டான். அந்தப் பயலோ ஒரே ஓட்டமாக ஓடலாமா அல்லது நிற்கலாமா என்று யோசிப்பதுபோல் நடந்து மீண்டும் திரும்பி வந்தான். இப்போது 'நான் மரத்துக் இட்ட சும்மா நின்னேன். வெட்டல. வெட்டல’ என்று எல்லோருக்கும் கேட்கும்படியாகக் கத்தினான்.

சுற்றிலும் மலைசூழ சூன்யமே சூழலாகச் சுழலும் அந்தக் காட்டுப் பகுதியின் ஆஸ்ரமம் போல் தோன்றும் சிதம்பரத் தின் டீக்கடைக்குள் சத்தம் வலுத்துக்கொண்டே போகிறது. குரல்கள் ஓங்கிக்கொண்டே போகின்றன. இது எதில் முடியும் என்று யூகிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட ஆசாமிகள் சின்ன அதிகாரிகள் என்றாலும், அவர்கள்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/71&oldid=1368969" இலிருந்து மீள்விக்கப்பட்டது