பக்கம்:இன்னொரு உரிமை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெட்டி மனிதர்கள் 6 3

 அந்தப் பகுதிக்கு அரசின் ஆயுத பாணிப் பிரதிநிதிகள். மேல்மட்ட அதிகாரிகளை 'சப்ளை' என்ற பாசத்தாலும், 'சர்வீஸ்' என்ற பந்தத்தாலும் கட்டிப்போட்டிருப்பவர்கள்.

'மரம் வெட்டி' மனிதர்கள், 'மனித வெட்டி' அதிகாரிகளைச் சூழ்ந்துகொண்டார்கள்.

ஒருவேளை நாளைக்கு பிரபல பத்திரிகைகளைப் புரட்டினால் 'சாராய கோஷ்டி அதிகாரிகளைத் தாக்கியது பலர் கைது' என்று செய்தி படிக்கலாம். ஒன்றும் சொல்வதற்கில்லை. என்றாலும் ஒன்று மட்டும் நிச்சயம். நாளைக்கு வரக்கூடிய அந்தச் செய்தி நாளையோடு முடிகிற செய்தியாக இருக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/72&oldid=1368811" இலிருந்து மீள்விக்கப்பட்டது