பக்கம்:இன்னொரு உரிமை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெங்களூர் தெரஸா 65

 அந்த வீட்டில் அதிகாரியின் இடத்தை அவர் மனைவி ஆக்கிரமித்துக்கொண்டதுடன், தன் உறவினர்கள் முன்னிலையில் அவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காக லிங்கையாவை கால் கடுக்கக் காக்க வைப்பதையும், கன்னாபின்னா என்று திட்டுவதையும், அவள் பிள்ளைகள் கூட, 'டேய் லிங்கையா' என்று கூப்பிடுவதையும் தன் புது மனைவியிடம் உளறி விட்டான்.

அவ்வளவுதான். அவள் அவனுக்கு ஆணையிட்டுவிட்டாள். 'திட்டு வாங்குவதற்கு அவள் அதிகாரி-புருஷன் இருக்கப்போ ஒங்களுக்கு என்ன தலைவிதியா’ என்று கேட்ட தோடு, இனிமேல் அரசாங்கப் பணி நாட்களில் எப்படித் தொலைந்துபோனாலும் விடுமுறை நாட்களில், அவன் அதிகாரி வீட்டுப் பக்கம் தலையைத் திருப்பக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.

புது மனைவியின் கண்டிப்புக்கும், பழைய அதிகாரியின் 'முறை வாடிக்கைக்கும்' இடையே அல்லாடிய விங்கையா, நேற்று அதிகாரி, 'நாளைக்குக் காலையிலேயே வந்துடுப்பா, என் வீட்டுக்காரி மாமியார் வீட்டுக்குப் போகணுமாம்’ என்று சொன்னபோது, இனிமேல் லீவு நாளையிலே எல்லாம், எனக்கு வேலை இருக்கும் லார்’ என்று பயந்து பயந்து சொன்னான். அதிகாரி அவனைப் பயமுறுத்துவதுபோல் பார்த்தாரே தவிர. எதுவும் பதில் சொல்லவில்லை.

இப்போது லிங்கையாவுக்கு உதறல் எடுத்தது. அந்த அதிகாரி தொலை தூரப் பகுதியான குல்பர்காவிற்கோ பிஜாப்பூருக்கோ தன்னை மாற்றிவிடப்படாதே. ஒரு அதிகாரி நினைத்தால், ஏதாவது ஒரு காரணத்தைக் கற்பித்து சஸ்பெண்ட் செய்துவிடலாமே!

ஸ்டியரிங்கில் குப்புற முகம் சாய்த்தபடி கிடந்த லிங்கையா, 'காக்கா குருவி' போன்ற காச்சி மூச்சி சப்தத் களைக் கேட்டுத் திடுக்கிட்டான். ஒருத்தன் 'சைடில்' ஆட்டோவை விட்டபடியே 'ஏய்... மவனே' என்றான்.

சி.-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/74&oldid=1368827" இலிருந்து மீள்விக்கப்பட்டது