பக்கம்:இன்னொரு உரிமை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலிழையில் ஒரு பந்தம் 83

அவள் யாரிடமும் பேசமாட்டாளாம். ஒரு கேள்வியை மூன்று தடவை கேட்டால், லேசாகத் தலையை ஆட்டுவாளாம். அதட்டிக் கேட்டால்தான் பதில் சொல்லுவாளாம். உட்கார்ந்த இடத்தில் ‘பிடித்து வைத்த பிள்ளையார்’ மாதிரி, அசைவற்று உட்கார்ந்திருப்பாளாம். அதே நேரத்தில், அவளால் யாருக்கும் எந்தவிதமான தீமையும் ஏற்படாதாம். தெருவில் நடக்கும்போதுகூட, அவள் ஒருத்தியைத் தவிர, உலகத்தில் எதுவுமே இல்லாதது மாதிரியே போய்க் கொண்டிருப்பாளாம்.

அப்படி இப்படியாகச் சேகரித்த இந்தத் தகவல்கள் அவனிடம் கூறப்பட்டபோது அவன் அதிர்ச்சியடைய முடியாத பேரதிர்ச்சியில் மூழ்கிப் போயிருந்தான். முதலிரவிலேயே அவளைப் பற்றிய சங்கதிகள் அத்தனையும் உண்மை என்பதையும் புரிந்துகொண்டான்.

அறைக்குள் போன அரைமணி நேரத்திற்குள். அவன் அழுதுகொண்டே வெளியே வந்து படுத்துக்கொண்டான். அவன் தந்தையால் அவனை நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லை. இன்னொரு ‘வழக்காளி’யை நம்பிப் பெண்ணைப் பார்க்காமல் மோசம் போய்விட்டோமே என்று தனக்குள்ளேயே குமைந்துகொண்டார்.

ரிரு மாதங்கள் ஓடின.

ஊரில் உள்ளவர்கள் வைரமணியிடம் துக்கம் விசாரிக்கத் துவங்கினார்கள். ‘மாடசாமி நாடார் மவன் வைரமணி. மாதிரில்லா இருக்கணும்’ என்று ஒரு காலத்தில் சொன்ன தந்தைமார்களிடம் ‘நான் பொண்ணப் பாக்காமக் கட்ட முடியாது. அப்புறம் வைரமணிக்கு வந்தது மாதிரித்தான் முடியும்’ என்று இளைஞர்கள் வாதாடினார்கள்

அந்த ஊரில் வைரமணியின் கதை, நல்லதங்காள் கதை. பஞ்சபாண்டவர் வனவாசம் மாதிரி மேற்கோள் காட்டப்படும் அளவுக்குப் போய்க்கொண்டிருந்தது. மகன் மன-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/92&oldid=1369375" இலிருந்து மீள்விக்கப்பட்டது