பக்கம்:இன்னொரு உரிமை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலிழையில் ஒரு பந்தம் 87


ளோட அம்மா எட்டாவது வயசில இறந்துட்டா. ஊருப்பயலுவ பேச்சைக் கேட்டு ரெண்டாவது கல்யாணம் பண்ணுனேன். அந்தப் பாவி பிள்ளையை அதட்டி அதட்டியே உருப்படாமப் பண்ணிட்டா. எட்டு வயசு வரைக்கும் ஓடுற பாம்பைப் பிடிக்கிற மாதிரிதான் இந்தப் பய மவள் இருந்தாள், இவள் தலையெழுத்து நான் ரெண்டாவது பண்ணிக்கிட்டேன்.

ஒங்க நெலைமையிலே யாரு இருந்தாலும் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கத்தான் செய்வாங்க! அதை நான் தப்புன்னு சொல்லல. ஆனால் இவள என் வீட்ல வைக்க முடியல. அன்னாடு குத்துப்பழி, வெட்டுப்பழிதான். இவள, எனக்கு 'வாச்ச' கைகேயி கைநீட்டி அடிக்கிறத என் கண்ணால பார்த்ததுக்கப்புறமும் நான் உயிர் வாழ்றேன்னா நான் ரோஷங் கெட்டவனாகத்தான் இருக்கணும்.

அதனால மாப்பிள்ளை, நீரு மகராஜனா கல்யாணம் பண்ணிக்கிடும், ஆனால் இவளையும் இங்கேயே வச்சிக்கிடும். அடிச்சாலும் சரி, அணைச்சாலும் சரி ஒம்ம இஷ்டம். ஒங்க வீட்ல எத்தனையோ மாடுக இருக்கு. ஆடுங்க இருக்கு. அதுலே இவளையும் ஒண்ணா நெனச்சி கஞ்சி ஊத்தும்: ஒம்ம மேல் எனக்கு எந்தவித கோபமும் கிடையாது. வரேன் மாப்பிள்ள, வரேன் மாப்பிள்ள... வரேன் லிங்கம்மா!"

மாமனார் போய்விட்டார், லிங்கம்மா அய்யா போவதைக்கூடத் திரும்பிப் பார்க்காமல் புருஷனுக்கு அருகே போய் நின்றாள். வைரமணிக்கு என்னவோ போலிருந்தது.

ரவு வேளை வந்தது. விடிந்தால் திருமணம்.

முற்றத்தில் போடப்பட்டிருந்த பந்தலில் உள்ளூர் மேளம் வெளியூருக்கும் கேட்கும்படி ஒலித்துக்கொண்டிருந்தது. வைரமணி புது வேட்டி, சட்டை கட்டி, துண்டை எடுத்துத் தோளில் போடப்போனபோது ஐயாசாமி தாத்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/96&oldid=1369380" இலிருந்து மீள்விக்கப்பட்டது