பக்கம்:இன்னொரு உரிமை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலிழையில் ஒரு பந்தம் 89


போட்டாள். மாலையோடு கையையும் அவன் தோளில் வைத்துக்கொண்டு அதை எடுக்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் நின்றாள்.

"லிங்கம்மா எதுக்கு மாலை போடுறேன்னு தெரியுமா? சொல்லும்மா, உன்னத்தாம்மா எதுக்கு?"

"அவியளுக்குக் கல்யாணம்.

"நாளைக்கு நீ அவங்க ரெண்டுபேருக்கும் திருநீர் பூசணும். அவங்க நல்லா இருக்கணுமுன்னு சாமியைக் கும்பிடணும். சரிதானே சொல்லும்மா."

"சரிதான்."

லிங்கம்மா மீண்டும் உள்ளே போய்விட்டாள், ஐயா சாமி, வைரமணிக்குத் தெரியாமலும், வைரமணி ஐயா சாமிக்குத் தெரியாமலும் தத்தம் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள் .

"மாமா!"

"என்னடா ராஜா?"

"அவளையும் கோவிலுக்குக் கூப்பிடும்."

"இல்ல நீரே கூப்பிடும்."

"லிங்கம்மா உன்னத்தாம்மா... நீயும் கோவிலுக்கு வா, வாம்மா! சீக்கிரம்... நாழியாவுது."

உள்ளே ஏதோ சத்தம் கேட்டதே தவிர அவள் வரவில்லை. என்னமோ ஏதோன்னு வைரமணி உள்ளே போனான்.

லிங்கம்மா பூனைக்குட்டி ஒன்றை மடியில் எடுத்து வைத்திருந்தாள். வெளி வீடுகளில் சுற்றாமல் அங்கேயே முடங்கிக் கிடக்கும் வெள்ளை முதுகும் மஞ்சள் கழுத்தங் கொண்ட அழகான சின்னக்குட்டி. அதன் காலில் ஏதோ ஒரு காயம், லிங்கம்மா சோற்றை அந்தப் புண்ணில் அப்பி, ஒரு துணியை' எடுத்து அதன் மேல் கட்டிக்கொண்டிருந்தாள். வைரமணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/98&oldid=1369373" இலிருந்து மீள்விக்கப்பட்டது