பக்கம்:இன்னொரு உரிமை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98  சு. சமுத்திரம்


அவளையும், அந்தப் பூனைக் குட்டியையும் மாறி மாறிப் பார்த்தான். போனவனைக் காணாமல் ஐயாசாமியும் அங்கே வந்தார்.

"பாத்தியாடா! அவள் பூனைக்குட்டியை எவ்வளவு பாசமா வச்சிருக்கா! இவளுக்குப் பாச பந்தமே இல்லன்னு நினைச்சது எவ்வளவு பெரிய தப்பு பாரு! அவள் மனசுல பாசம் இருக்கு. ஆனா வாயுள்ள பிராணிங்ககிட்டே அதைக் காட்ட பயந்துக்கிட்டு வாயில்லாப் பிராணிங்ககிட்ட காட்டுறா. எல்லாம் மாடன் செயல். சரி சரி. நேரமாயிட்டு புறப்படு."

"அவளைக் கூப்பிடும் மாமா!"

"லிங்கம்மா எழுந்துரு, கோவிலுக்குப் போவலாம்."

லிங்கம் மா பூனைக்குட்டியை மடியில் வைத்துக் கொண்டே புறப்பட்டாள்.

"பூனைக்குட்டிய கீழே விடும்மா. கோவிலுக்கு அது வரக்கூடாது. சீக்கிரமா விடு."

லிங்கம்மா விடவில்லை. அந்தப் பூனைக்குட்டி இல்லாமல் கோவிலுக்குப் போக விரும்பாதவள் போல் மீண்டும் கீழே உட்கார்ந்தாள். அதை அவர்கள் பிடுங்கிவிடுவார்கள் என்று பயந்தவள் போல் குட்டியை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். அதன் கால் புண்ணில் வாயால் ஊதினாள்.

வைரமணி அந்த வாயில்லாப் பிராணியையும் வாயுள்ள பிராணியையும் பார்த்துக்கொண்டே நின்றான். அப்போது ஒலி பெருக்கியில் 'ஆயிரத்தில் ஒருத்தியம்மா' என்ற பாடல் ஒலித்தது.

வைரமணி நெஞ்சைப் பிடித்துக்கொண்டே சிந்தித்தான்.

'இந்தப் பச்சைக் குழந்தையைத் தள்ளிவிட்டு, இன்னொரு வயது வந்தவளைப் பிடித்து வாழவேண்டியது அவசியந்தானா? பூனைக்குட்டிக்கு அடைக்கலம் கொடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/99&oldid=1369109" இலிருந்து மீள்விக்கப்பட்டது