பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TamilBOT (பேச்சு) 01:58, 12 பெப்ரவரி 2016 (UTC) காட்டு வரி

முட்டையும் கறையான் புழுவும் அடை அடை யாக இருக்கும். அந்த அடையைப் புற்ருஞ் சோறு என்றும் குரும்பி என்றும் சொல் வதை நான் கேட்டிருக்கிறேன். - தோழி: ஈசற் புற்றையும் அதனுள் இருக்கும் பாம்பையும் பற்றி நாம் அஞ்ச வேண்டிய தில்லையே! தல்ைவி: பொறு, பொறு. அந்தப் புற்றஞ் சோற்றைத் தின்பதென்ருல் கரடிகளுக்கு மிகுதியான விருப்பம். ஆகையால் பாதி ராத்திரியில் அவை ஈசற் புற்றை அடைந்து தம்முடைய கைகளைப் புற்றுக்குள்ளே விடும். பெரிய கையையுடைய ஆண் கரடிகள் அவை. தோல் உறைக்குள்ளே அமைந்த நகங்கள் கூர்மையாக இருக்கும். அந்தக் கைகளேப் புற்றுக்குள் விட்டு அங்குள்ள குரும்பியாகிய உணவை எடுத்து அவை உண்ணும். அப் படிக் கைகளே உள்ளே விடும்போது அதனுள் சுகமாகக் கிடக்கின்ற பாம்பை நகங்கள் குத்தும். அதல்ை பாம்புக்குத் துன்பம் உண்டாகும். தோழி. அதற்கும் நமக்கும் என்ன தொடர்பு ? தலைவி. அந்தப் பாதி ராத்திரியில் இருட் பிழம்புபோலக் காடிகள் புற் று க் க ள க் தேடிக்கொண்டு வந்தால், நாம் தடையின்றி

95