8 38 இராமன் - பன்முக நோக்கில் கிருஷ்ணன் இறைவன்தான் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகு அவன் செய்யும் செயல்களை மனிதர் செய்யும் செயல் களோடு வைத்து எண்ணவோ, ஆராயவோ இடமில்லாமல் போய்விட்டது. இந்த இக்கட்டை நன்கறிவான் கம்பநாடன். அவனுக்குக் கிடைத்த பெரிய வசதி என்னவென்றால் வான்மீகம், புத்த சாதகக் கதைகள், பெளம சரிதம், பத்மபுராணம் ஆகிய அனைத்தும் இராமனை மனிதனாகவே காட்டிச் செல்வதால் கம்பனும் அதை அடியொற்றி இராமனை மனிதனாகவே காட்டிச் செல்கிறான். அப்படியானால், இராமன் கடவுள் என்ற தமிழ்நாட்டுக் கொள்கை என்ன ஆவது? இத் தமிழர் கொள்கையைக் கம்பனும் முழுமனத்தோடு ஏற்றுக்கொள் கிறான். அதை எவ்வாறு அவன் கையாள்கிறான் என்பதை இரண்டாவது கட்டுரையில் விரிவாகக் காணலாம். தமிழில் இராமகாதையைப் பாடிய கம்பநாடன் வான்மீகத்தை மட்டும் கற்றான் என்று கூறுவது சரியன்று. புத்த சாதகக் கதைகள், விமலசூரியின் பெளம சரிதம், இரவிசேனரின் பத்மபுராணம், காளிதாசரின் ரகுவம்சம் பாரதத்தில் காணப்படும் இராமகாதைப் பகுதிகள் என்ப வற்றையும் நன்கு கற்றிருந்தான் என்று நினைய வேண்டி யுள்ளது. என்றாலும், வான்மீகியை அடுத்துத் தோன்றினவும், ஒரளவு சிறப்பு உடையனவுமாகிய வசிட்டர் இயற்றிய யோக வசிஷ்ட இராமாயணம், போதாயனர் இயற்றிய இராமாயணம் ஆகிய இரண்டையும் படித்து அறிந்துகொண்டபின் அவற்றுள் வான்மீகியின் காப்பியமே சிறந்தது என்ற முடிவிற்கு வந்து, அதனையே பின்பற்றுவதாகத் தன் பாயிரத்தில் 10ஆம் பாடலில் “தேவபாடையின் இக் கதைச் செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும், முந்திய நாவினான் உரையின்படி" (10) என்று கூறுகிறான். எனவே, ஏனைய இரண்டையும் விட வான்மீகியின் அமைப்பே சிறந்தது என்று கம்பன் கருதினான் என்பது தெளிவாகிறது.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/26
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை