உடன்பிறவாத் தம்பியரும் இராமனும் ேே 267 வந்து இராகவன் திருவடிகளில் வீழ்ந்தான். அன்னை எவ்வித ஆபத்தும் இல்லாமல் நலமாகத் திரிசடையுடன் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்ற செய்தியைச் சொல்லியதும், இராம - இலக்குவர்களும் குரங்குக் கூட்டத் தினரும் துயரக் கடலினின்று எழுந்து ஆனந்தக் கடலில் மூழ்கினர். மருத்துமலையைக் கொணர்ந்து தசரதன் பிள்ளைகள் நால்வர்க்கும் மறுபிறவி தந்தான் அனுமன். சீதை பட்டாள், இந்திரசித்தன் அயோத்தி போகிறான் என்ற செய்தியால் சாவை ஒத்ததுன்பத்தில் ஆழ்ந்த தசரத ராமனும் இலக்குவனும் மீண்டும் உயிர் பெற்றனர். அதற்கு நன்றி செலுத்தும் வகையில் வீடணனை மார்புறத் தழுவிக்கொண்ட இராகவன், தழுதழுத்த குரலில் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறான். "வீரனும் ஐயம் தீர்ந்தான்; வீடணன் தன்னை மெய்யோடு ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துறத் தழுவி, ஐய! தீர்வது பொருளோ, துன்பம்? நீ உளை; தெய்வம் உண்டு; மாருதி உளன்; நாம் செய்த தவம் உண்டு; மறையும் உண்டால்" - கம்ப. 8934 என்ற முறையில் தெய்வம், வீடணன், மாருதி, தான் செய்த தவம் என்பவை இன்றும் உள' என்று மகிழ்ந்தான் இராகவன். வீடணனாகிய தம்பி இராம - இலக்குவர்க்குச் செய்த பேருதவிகளில் இது முக்கியமான ஒன்றாகும். இதற்கும் மேலான உதவி நிகும்பலை யாகம்பற்றி அவன் எச்சரித்த தாகும். . நிகும்பலை வேள்வி: எச்சரிக்கையும் உதவியும் பின்னர் வரப்போகும் ஆபத்தின் வன்மையை இந்த மகிழ்ச்சி குறைத்து மதிப்பிடும் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்ற கருத்தில் நிகும்பலை வேள்வியின் உட்பொருளை இராமனுக்கு விளக்குகிறான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/287
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை