பக்கம்:இலக்கண வரலாறு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

செய்கின்றது அறிவிலாதாரை அறிவு கொளுத்த வேண்டி யன்றே; யாதானும் ஒரு நூல் விரித்தோதிய பொருளைத் தாமும் விசித்து ஓதுவாராயின் ஓதுகின்றதனாற் பயன் இன்றாமாதலால் முதனூலாசிரியர் விரித்துக் கூறின பொருளைத் தொகுத்துக் கூறலும் தொகுத்துக் கூறின பொருளை விரித்துக் கூறலும் நூல் செய்வார் செய்யும் மரபு என்றுணர்க. அஃதேல் இந்நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின் காமப்பகுதியும் வீரப்பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடும் ஆகலானும் பொருளானே அறஞ் செய்யும் ஆகலானும் இன்பமும் பொருளும் ஏற்றம் என ஓதினார் என உணர்க”, என்று வரையும் எழுத்தால் தொல்காப்பிய நூலோட்ட நுணுக்கத்தை நுவல்கிறார்.

உழிஞைத் துறையை, “அதுவே தானும் இரு நால் வகைத்தே” என்னும் ஆசிரியர் (பொ. 67), அடுத்த நூற் பாவில் அத்துறைகளைக் கூறி “நாலிரு வகைத்தே” (பொ. 68) என்றும் கூறுகிறார். இதனைக் கூறியது கூறல் என எவரும் எண்ணி விடுவரோ என்னும் எண்ணம், “கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை” இளம் பூரணர்க்குத் தோன்றிற்றுப் போலும். அதனால், “பதினெட்டு இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துத் தொகை கூறினார். இது கூறியது கூறலன்று; தொகை” என்றார்.

‘ஆசிரியன் ஓதினான்’ என்பது போலக் கூறுதலே பண்டை உரையாசிரியர் மரபு (எழுத். 469) “குறிப்பு என்றார்”, “கூறினார்” (பொருள். 104) என இளம்பூரணத்துள் வருதல் பதிப்பாசிரியர் கருத்துப்போலும்!

மிகைபடக் கூறல் என்னும் நூற்குற்றம் விளக்கும் இளம்பூரணர், “மிகைப்படக் கூறலாவது அதிகாரப் பொருளன்றிப் பிற பொருளும் கூறுதல். அஃதாவது “தமிழிலக்கணஞ் சொல்லுவான் எடுத்துக்கொண்டான் வடமொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/116&oldid=1471431" இலிருந்து மீள்விக்கப்பட்டது