பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 99



வீரர்களையும், அவர்கள் பெற்ற அப்புண்களின் நிலைமையினையும் கூறிக் கொண்டே செல்ல, அவ்வீரர்களுக்கு அன்புரை வழங்கி ஆறுதல் உரைத்துக் கொண்டே செழியன் சென்றான். பேயும் உறங்கும் நடுயாமம் என்றும் பாராது, படை வீரர்டால் பரிவு காட்டும் பசும்புண் பாண்டியனின் போர் நுணுக்க அறிவு பாராட்டற்குரியதாம்.

பேராண்மை கொண்டு பேரரசு செலுத்தும் பசும்பூண் பாண்டியன் நாட்டவர் போற்றும் நல்ல பல பண்புகளும் பெற்றிருந்தான்; பெற்ற அப்பண்புகளைப் பிறர் அறியக் காட்டி அறம் உரைக்கும் அரசனும் ஆவான்; பகைவர் படை பாண்டி நாட்டுத் தலைநகரைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அஃது அறிந்த பசும்பூண் பாண்டியன், தன் அரசவையில் உள்ளார் முன்னிலையில், “யாமோ பெரும் படை யுடையோம்; இவனோ இளையன்!” என எண்ணி, என். ஆற்றல் அறியாது வந்து எதிர்த்த அவ்வரசர்களை ஒரு சேர அழித்து, அவர்களையும், அவர்கள் குடைகளையும், முரசுகளையும் கைப்பற்றி மீள்வேன்; அவ்வாறின்றி, வறிதே மீள்வேனாயின், என் ஆட்சியின் கீழ் வாழும் என் நாட்டு மக்கள், ஆட்சியாளரால் அல்லல் பல அடைந்து, ஒடி உய்யும் இடம் அறியாது, கண்ணிர் விட்டுக் கலங்கி நின்று, ‘எங்கள் நாட்டு அரசன் நனிமிகக் கொடியவன்! யாம் என் செய்வோம்? எவ்வாறு உய்வோம்?’ எனச் செயலற்றுப் பழிதுiற்றப் பண்பிலா அரசு செலுத்தும் பழியுடையேனாவேன்!