பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14
பெருங்கோப் பெண்டு

கைவர் கைப்பற்றி ஆண்ட தன் நாட்டின் ஒரு பகுதியாய் ஒல்லையூர் நாட்டை, அப்பகைவரை அழித்து வென்று, மீட்டும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்து, அச்சிறப்பால், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என அழைக்கப் பெற்ற அரசன் வரலாறு முன்னர் உரைக்கப்பட்டுள்ளது. சிறந்த வீரனும், நிறைந்த குணமுடையோனுமாய அப்பூதப் பாண்டியன் மனைவியே பெருங்கோப் பெண்டு. பெருங்கோப் பெண்டு எனும் பெயர் பேரரசன் மனைவியார் எனப் பொருள் தந்து, அரசர் மனைவி யரைக் குறிக்கும் பொதுப் பெயராய் வழங்குமேனும், பெருங்கோப் பெண்டு எனும் பெயரால் சிறப்பாக அறியத் தக்கவர், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மனைவியராய இவர் ஒருவரே.

"சிறந்த பேரமர் உண்கண் இவள்!" எனத் தன் கணவனாலேயே பாராட்டப் பெறும் பேறுடையளாய பெருங்கோப்பெண்டு, பேரழகும், பெருங்குணமும் உடையளாவாள். கணவன்பால் பேரன்புடைய இவள்,