பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 புலவர் கா. கோவிந்தன்



அவன் பேரன்பையும் குறைவறப் பெற்றிருந்தாள். ‘பகைவரை வென்று துரத்தேனாயின், என் அரியணை என்னுடன் அமர்ந்திருக்கும், அழகும், அறிவும் நிறைந்தவளாய என் மனைவியைப் பிரிவேனாகுக!” என அவன் கூறும் உரையால், இவள்பால் அவன் கொண்டிருந்த அன்பு எத்துணை ஆழமும், அக்லமும் அளக்கலாகாப் பெருமையும் உடைத்து என்பது விளங்கும்.

ஒருநாள், அரசியல் அலுவல் காரணமாகத் தன் மனைவியைப் பிரிந்து செல்ல வேண்டிய நிலை பூதப் பாண்டியனுக்கு ஏற்பட்டது. இவள் தன்னைப் பிரிந்து ஒரு கணமும் உயிர் வாழாள் என்பதை அவன் உணர்வான். முழவோசை இடைவிடாது முழங்கிக் கொண்டே உளது. மேலும் காவலர் கண் இமையாது காத்துக் கொண்டும் உள்ளனர். ஆகவே சிறிது அச்சம் அற்று இருத்தலும் இயலும்! என்று எண்ணிப் பிரிந்து சென்றான்; சென்றவன் சென்ற இடத்திலேயே நெடிது நின்றானும் அல்லன், விரைந்து வீடுவந்து சேர்ந்து விட்டான். என்றாலும், அத்துணை ஏற்பாடுகள் செய்துவிட்டுச் சென்று, அத்துணை விரைவில் வந்தானாயினும், அச்சிறு பிரிவினையும் இவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. உளம் தளர்ந்து உறுதுயர் உற்றாள். அத்துணை அன்புடையாள் இவள்.

இவ்வாறு அன்பால் பிணைப்புண்டு அறவாழ்வு மேற்கொண்டு வாழ்ந்த அவர்கள் வாழ்க்கையில் பெரும் பிரிவு குறுக்கிட்டு விட்டது. தன்னை வந்து