பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 117


“ஒரு பிடி படியும் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடு”

எனப் பாடிப் புகழ்ந்துள்ளார்.

நற்குடிப் பிறந்தாரிடையே ஒழுக்கமும், வாய்மை யும், நாணும் இயல்பாகவே பொருந்தியிருக்கும். அடுக்கிய கோடி பெறினும், குன்றுவ செய்யாக் குணம் குடிப் பிறந்தாரிடையேதான் உண்டு என்பர். ஆதலின் உயர் குடியினராதல் ஒருவர்க்குக் கருவிலேயே வாய்த்த திருவாகும். கிள்ளி வளவன் பிறந்த சோழர்குடி வழி வழிச் சிறப்புடைய குடியாம். அவன் பெருமைக்கு அவன் குடிப் பெருமையே காரணம். இதை மாறோக்கத்து நப்பசலையார் விளக்குந் திறம் போற்றத் தக்கது. “கிள்ளி வளவ! நீ கொடையாற் சிறந்தவன் எனக் கூறுகின்றனர். அதனால் உனக்கொரு புகழுமில்லை; அது நீ பிறந்த குடியின் பண்பு. அடைக்கலம் புகுந்த புறாவின் பொருட்டுத் துலை புகுந்து புகழ் கொண்ட சிபியினை முதல்வனாகக் கொண்டது உன்குடி கொடைக் குணத்தை இயல்பாகக் கொண்டது சோழர் குடி. அக்குடி வந்தார் அனைவருமே அக்குணமுடையாராவர். ஆகவே அக்குணம் உன்பாலிருப்பது உனக்கே உரிய புகழன்று. அஃது உன் குடிப்புகழ்.

“கிள்ளி வளவ! நீ பகைவரும் அஞ்சும் பேராண்மையுடையவன் என்று கூறுகின்றனர். அதுவும் உனக்குப் புகழ் அளிக்காது. உன் குடி, தேவர் பொருட்டு ஆகாயத்தே திரிந்து கேடு விளைக்கும் கோட்டைகளை வாழ்விடமாகக் கொண்ட அரக்கர்களை அழித்துப்