பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 (இரு பொருள்களிலும்) அமைய வேண்டுவது அணைத்தல் {ஆம்; இங்கும் இருபொருள்களும் உண்டு) நெருப்புக் காட்டை அணைத்தால்தானே (இரு பொருள்களிலும்) அது அணையும். 3. மின்னிடும் உன் சிரிப்பெங்கே? முழங்கிடும் இடிப் பேச்செங்கே? இந்த இரு வரிகளிலும்தான் பழையபடியும் தங்கள் முன் பிறவியை எடுத்துக் காட்டுகிறீர்களோ? அரசியலாம் இப்பிறவியை அறவே விட்டு விட்டுக் கவிஞராய் ஆகி விட்டீர்களே! தங்கள் உண்மைப்பிறவி- உயர் பிறவி அது தானே! வானத்தின் மின்னலைச் சிரிப்பாகவும் இடியைப் பேச்சாகவும் கற்பனை செய்யும்பொழுது அத்தனை அவலங்களும் மறைந்து வானப்பெண் நம்மை வாசித் தழுவுவதுபோல் இன்பம் எழுகின்றதே. 4. பன்னெடு காளாய் உந்தன் பன்னீர்க் குளியலின்றி என்னருந் தமிழகம்தான் ஏங்குதல் உணர்ந்திடுக! கலைஞர்-கவிஞராகிய தாங்கள் அந்தக் கலையையும்கவிதையையும் கூட கடமை என்று வரும்பொழுது அவை தடையாக இல்லாமல் படையாகவே பயன்படும் வகையில் செய்யும் நடை படைத்தவர்கள் அன்றோ? எனவே, வானத்தின் சிரிப்பிலும் பேச்சிலும் ம(ா)னத்தைப் பறி கொடுத்து மாசுறாமல் காக்கும் தங்கள் மறப்பண்பு இக் கவிதை வரிகளிலும் மின்னி இடிக்கிறதே. பன்னெடும் நாளாய் என்னும் தொடரில்தான் எவ்வளவு ஏக்கம்? :உந்தன்' என்ற சொல்லில்தான் எவ்வளவு உறவு! :பன்னீர்க் குளியல் என்ற சொல்லில்தான் எவ்வளவு குளிப் பாட்டு குறிப்பாட்டு: பன்னீர் என்ற சொல்லில் மட்டுமே கூட தங்கள் பிரியாவிடை’ யாகிய சிட்டுச் சிலேடை கீச்" இடுகிறதே, மழைநீர்-பல துளி நீர்- பன்னீர் போலும்